யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தப் புகைப்படம் இரண்டு ஆண்டுகள் பழையது. அதாவது தவெக கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாந்த் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா. குடும்பமே பாஜக காலடில தான் கிடக்கு போல.
விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்-ன் பிரச்சார பயணக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்தது. இதனை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, தவெக-க்கு பாஜக உதவி செய்கிறது. அதனால் தான் உச்ச நீதிமன்றம் தவெக-விற்கு சாதகமாக சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்ற கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இந்நிலையில், விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியுடன் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, கரூர் வழக்கிலிருந்து விஜய்யை காப்பாற்ற சொல்லி பாஜகவிடம் கோரிக்கைவே இந்த சந்திப்பு நடந்ததாக பரப்பப்படுகிறது.
விஜய்யை காப்பாற்ற சொல்லி அமர் பிரசாந்த் ரெட்டி காலில் விழுந்த விஜயின் தாய் ஷோபா
குடும்பமே பாஜக காலடில தான் கிடக்கு போல💦💦 pic.twitter.com/IS3lmGkqS5
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடியபோது, தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் இந்த புகைப்படத்தை காணமுடிந்தது.
She is the biggest strength behind @actorvijay. pic.twitter.com/riTcAoEcoJ
அதில் இந்த புகைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவிடப்பட்டிருப்பதை காணமுடிகிறது.
இதிலிருந்து, இது இரண்டு ஆண்டுகள் பழைய புகைப்படம் என்பது தெரியவருகிறது. அதாவது இந்த புகைப்படம் தவெக கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
இரண்டாண்டுகள் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்-ன் அம்மா ஷோபா சந்திரசேகர் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியை சந்தித்ததாக தவறாக பரப்புகிறார்கள்.