YouTurn

காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட உணவை ஸ்டாலின் உண்ணவில்லையா? உண்மை என்ன?

காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட உணவை ஸ்டாலின் உண்ணவில்லையா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட உணவை உண்பது வீடியோவில் தெளிவாகவே பதிவாகியுள்ளது.

பரவிய செய்தி

பஞ்சாப் முதல்வர் கூட தமிழ்நாட்டு பாரம்பரிய உணவான பொங்கல் சாப்பிடுறாரு. ஆனா ஸ்டாலின் கிண்டுற வீடியோலாம் வருது சாப்பிட வரும் போது கட் ஆகுது, உதயநிதி தலை அசைத்த பிறகு ஒரு ஸ்பூன் எடுத்து வாய்ல வைக்குறாரு வாய் மெல்லுற மாதிரியே தெரியல எனக்கு மட்டும் தான் இப்படி தெரியுதா ??? 

image.png

Link

விரிவான விளக்கம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தற்போதைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று, நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலினுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்களும் கலந்து கொண்டார்.

 

இந்நிலையில், இந்த காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘பஞ்சாப் முதல்வர் கூட பள்ளியில் கொடுக்கப்படும் பொங்கலை சாப்பிடுகிறார். ஆனால் ஸ்டாலின் சாப்பிடவில்லை’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது



உண்மை என்ன?

 

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை வரிவுபடுத்தும் நிகழ்ச்சி குறித்து இணையத்தில் தேடியபோது, ‘சத்தியம்’ செய்தித் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வீடியோவைக் காணமுடிந்தது.


 

2025 ஆகஸ்ட் 26 அன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், முதலில் அருகில் இருக்கும் மாணவர் ஒருவருக்கு முதல்வர் ஸ்டாலின் உணவை ஊட்டி விடுகிறார். பின்னர் அவரும் உணவை சாப்பிடுகிறார். அவர் உணவு சாப்பிடுவது இந்த செய்தியில் தெளிவாக பதிவாகி இருப்பதை காணமுடிகிறது.

 

இதனை மறைத்து, காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வழங்கப்பட்ட  உணவை சாப்பிடவில்லை என்று தவறாக பரப்பப்படுகிறது.

 

முடிவு:

 

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை வரிவுபடுத்தும் நிகழ்ச்சியின் போது, முதல்வர் ஸ்டாலின் தனக்கு கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடவில்லை என்று தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க