யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
டேங்க் கிளீனர் என்று சொல்லக்கூடிய ‘Pleco’ வகை மீன்கள், சேற்றில் உள்ள ஈரப்பதத்தை உதவியாக கொண்டு, காற்றை உள்ள பிராண வாயுவை சுவாசித்து 30 மணிநேரம் மட்டும் உயிர் வாழும். ஆனால் ஒரு மாதம் வரை அவ்வாறு வாழ முடியாது.
பரவிய செய்தி
டேங்க் கிளீனர் மீனை பிடித்து கரையில் போட்டாலும் சாகாது. இந்த மீன் ஒரு மாதம் வரை வெயிலில் காய்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் பட்டால் உயிர் வந்து விடும்.

விரிவான விளக்கம்
ஒரு குறிப்பிட்ட வகையினைத்தைச் சேர்ந்த மீன்கள் வரிசையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இந்த மீனுக்கு டேங்க் கிளீனர் என்று பெயர். இந்த மீனை மனிதர்கள் சாப்பிட மாட்டார்கள். இந்த மீனை பிடித்து கரையில் போட்டாலும் சாகாது. இந்த மீன் ஒரு மாதம் வரை வெயிலில் காய்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் பட்டால் உயிர் வந்து விடும்’ என்று சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?
நீரில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்கு உயிர் வாழும் மீன்கள் குறித்து இணையத்தில் தேடியபோது, ‘The Times of India’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி போன பின்னர், அதில் உள்ள சேற்றில் (Mud) வாழும் மீன் இனம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
தென்னமெரிக்காவின் ஆறுகளிலும் துணை நதிகளிலும் வாழும் ‘Pleco’ என்ற வகையைச் சேர்ந்த மீன், காற்றில் உள்ள பிராண வாயுவை (Oxygen) சுவாசித்து உயிர் வாழும் வகையில் தனித்துவமான உறுப்பைக் (Organ) கொண்டுள்ளது. இந்த உறுப்பு தான் இந்த மீன் நீர் இல்லாமலே அதன் தோல் ஈரப்பதமாக இருக்கும் நிலையில் 30 மணிநேரம் வரை உயிர்வாழ உதவுகிறது.
இந்த Pleco வகை மீன் வரண்ட காலங்களில் நீர்நிலைகளில் உள்ள சேற்றில் புதைந்து கொண்டு அதன் தோலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டு, காற்றை சுவாசித்து உயிர் வாழ்கிறது. இது வரண்ட காலங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறையும் போது அதற்கு தகவமைத்துக் கொண்டு வாழ உதவுகிறது.
மேலும் இது குறித்து தேடியபோது, ‘Coral Fish 12g’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது. அதில் பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது போன்ற அதே மீன், வரண்ட சேற்றில் அசைவின்றி கிடக்கிறது. அதில் தண்ணீர் ஊற்றிய போது அந்த மீன் வாயை அசைத்து அதனை குடிப்பதைக் காணமுடிகிறது. அந்த வீடியோவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பில், ‘இந்த ‘Pleco’ வகை மீன் தனது வயிற்றில் பிராண வாயுவை சேமித்து வைத்து 30 மணிநேரம் வரை நீரில்லாமல் வாழும் என்றும் சில நேரங்களில் காற்றை உறிஞ்சி இது உயிர் வாழும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ‘Pleco’ வகை மீன்கள் நீரில்லாமல் சேற்றில் உள்ள ஈரப்பதத்தை உதவியாக கொண்டு 30 மணிநேரம் உயிர் வாழும் என்பதும், ஆனால் ஒரு மாதம் வரை அவ்வாறு இருக்கமுடியாது என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
டேங்க் கிளீனர் என்று சொல்லக்கூடிய ‘Pleco’ வகை மீன்கள், சேற்றில் உள்ள ஈரப்பதத்தை உதவியாக கொண்டு, காற்றை உள்ள பிராண வாயுவை சுவாசித்து 30 மணிநேரம் மட்டும் உயிர் வாழும். ஆனால் இதனை திரித்து டேங்க் கிளீனர் வகை மீன்கள் ஒரு மாதம் வரை தண்ணீர் இல்லாமல் வாழும் என்று தவறாக பரப்பப்படுகிறது.