YouTurn

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்று தவறாக பரப்பப்படும் செய்தித் தலைப்பு!

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்று தவறாக பரப்பப்படும் செய்தித் தலைப்பு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த செய்தித் தலைப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது வெளியிலிருந்து தாக்கம் செலுத்தப்படுவது குறித்து பிற நீதிபதிகள் முன்வைத்த விமர்சனத்தை பற்றியதாகும்.

பரவிய செய்தி

"நான் ஒரு கிறுத்துவன் என்பதால் இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவே என்னை காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதியாக அமர்த்தினார்கள், ஆனால் BJP ஆட்சியில் அது சாத்தியம்மில்லாமல் போனது" உச்ச நீதி மன்ற நீதிபதி ஜோசப் ஒப்புதல் வாக்குமூலம்.!!



X Link 


விரிவான விளக்கம்

’We felt then CJI was being remote-controlled’ என்ற தலைப்புடன் இருக்கும் செய்தித்தாள் முகப்பு பக்கத்தை பதிவிட்டு, ‘நான் ஒரு கிறுத்துவன் என்பதால் இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவே என்னை காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதியாக அமர்த்தினார்கள், ஆனால் BJP ஆட்சியில் அது சாத்தியம்மில்லாமல் போனது’ என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அதுபற்றிய செய்தி நாளிதழில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன:


பரப்பப்படும் தலைப்பைக் கொண்டு தேடுகையில் 2018 டிசம்பர் 3ஆம் தேதியன்று ’THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘2018ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று குரியன் ஜோசப் மற்றும் பிற மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சேர்ந்து கொடுத்த பத்தரிகையாளர்கள் சந்திப்பு இந்திய அளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.


image.png


இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ‘வெளியிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதாகவும், அரசியல் சார்புடன் வழக்குகளுக்கு நீதிபதிகளை நியமிப்பதாகவும்’  குரியன் ஜோசப், செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய் மற்றும் மதன் லோகுர் ஆகிய  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு வெளிப்படையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு வைத்து தலைமை நீதிபதி பற்றி பேசியது இதுவே இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாகும். 


image.png


இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பத்திரிகையாளர் சிந்திப்பு பற்றி 10 மாதங்களுக்கு பிறகு நீதிபதி குரியன் ஜோசப் கொடுத்த பேட்டி குறித்துதான் இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.


எனவே, பரப்பப்படும் புகைப்படத்தில் உள்ள தலைப்பு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நீதித்துறை அமைப்பிற்கு வெளியிலிருந்து தாக்கம் செலுத்தப்படுவது குறித்து குரியன் ஜோசப் உள்ளிட்ட பிற நீதிபதிகள் முன்வைத்த விமர்சனத்தை பற்றியதாகும்.


இதனை திரித்து, நீதிபதி குரியன் ஜோசப் தான் இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவே காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தவறாக பரப்பப்படுகிறது. 


முடிவு:


2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது குறித்து குரியன் ஜோசப்  பேசியதை திரித்து, காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கவே அவர் நியமிக்கப்பட்டதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் அவ்வாறு செய்யமுடியவில்லை என்று அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும் தவறான பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க