YouTurn

துணை முதல்வர் உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

2022 நவம்பரில் சினிமா விகடன் நிகழ்ச்சியில் பேசும் போது கூறிய பழைய வீடியோவைக் கொண்டு, துணை முதல்வராக இருக்கும் போது உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதாக தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

தினமும் இரண்டு படம் பார்க்கும், Red giant தொழிலதிபர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

ரீல் அந்து போச்சு @Udhaystalin 


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

2026 நாடாளுமன்றத் தேர்தலையொட்டு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் தவெக தலைவர் விஜய் வெவ்வேறு ஊர்களுக்கு பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருக்கிறார். வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே விஜய் மக்களை சந்திப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் பொதுவாக பகடி செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இவ்வாறு சனிக்கிழமை மட்டும் பிரச்சாரத்திற்கு வருவதை விமர்சிக்கும் வகையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “வாரத்திற்கு நான்கு ஐந்து நாள்கள் வெளியூரில்தான் இருப்பேன். நான் வெறும் சனிக்கிழமைகளில் மட்டுமே வெளியே வரமாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட சுத்திக்கொண்டுதான் இருப்பேன்” என்று பேசினார். 


இந்நிலையில், ’நான் தினமும் இரண்டு படம் பார்ப்பேன்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை பதிவிட்டு, ஒரு நாளுக்கு இரண்டு படம் பார்க்கும் துணை முதல்வர் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன:


’நான் தினமும் இரண்டு படம் பார்ப்பேன்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்றுசினிமா விகடனில்’ வெளியான உதயநிதியின் பேட்டியைக் காணமுடிந்தது. அதில் தான் உதயநிதி அவ்வாறு பேசியுள்ளார். 


image.png


உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டது குறித்து தேடுகையில், 2024 செப்டம்பர் 28 அன்று அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு மறுநாளான செப்டம்பர் 29ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது. அதற்கு முன்னால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.


image.png


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி, 2022 டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.


image.png


இதிலிருந்து, 2022 நவம்பரில் சினிமா விகடனில் பேசும் போது  ’நான் தினமும் இரண்டு படம் பார்ப்பேன்’ என்று உதயநிதி பேசிய போது அவர் அமைச்சராகக் கூட இல்லை. சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. 


முடிவு:


2022 நவம்பரில் சினிமா விகடன் நிகழ்ச்சியில் பேசும் போது கூறிய பழைய வீடியோவைக் கொண்டு, துணை முதல்வராக இருக்கும் போது உதயநிதி ஒருநாளுக்கு இரண்டு படங்கள் பார்ப்பதாக தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க