YouTurn

சமீபத்தில் டாஸ்மாக்கில் ரகளை செய்த பெண் என்று பரவும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

சமீபத்தில் டாஸ்மாக்கில் ரகளை செய்த பெண் என்று பரவும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

10 ஆண்டுகள் முன்பிலிருந்தே இந்த புகைப்படங்கள் பரவி வருகிறது.

பரவிய செய்தி

திண்டுக்கல்லில்  'டாஸ்மாக்' பாரில் மதுமயக்கத்தில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் பத்திரமாக அழைத்துச் சென்றனர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் பாரதி கண்ட 'புதுமைப் பெண்' போல!



Facebook Link / Archive Link

விரிவான விளக்கம்

பெண் ஒருவர் கடையோர நடைபாதையில் படுத்திருக்கிறார். அவரை போலீஸார் எழுப்பி தண்ணீர் கொடுக்கிறார்கள். அந்த பெண் திரும்ப போலீஸாரிடமே வாக்குவாதம் செய்கிறார். இந்த நிகழ்வுகளை காட்சிபடுத்தும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘திண்டுக்கல்லில் 35 வயதுள்ள பெண் ஒருவர் 'டாஸ்மாக்' பாரில் மதுமயக்கத்தில் ரகளையில் ஈடுபட்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணை போலீசார் பத்திரமாக அழைத்துச் சென்றதாகவும்’ பரப்புகிறார்கள்.



உண்மை என்ன?

 

பரப்பப்படும் புகைப்படங்களை ‘Reverse Image Search' முறையில் இணையத்தில் தேடியதில், பேஸ்புக் பதிவு ஒன்றில் இந்த புகைப்படங்களை காணமுடிந்தது.

 

‘கடலூர் நண்பர்கள் இயக்கம்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே இந்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம்.


 

இதிலிருந்து, இந்த புகைப்படங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரவி வருகிறது  என்பது உறுதியாகிறது.

 

முடிவு:

 

10 ஆண்டுகள் பழைய புகைப்படங்களை பதிவிட்டு, தற்போது திண்டுக்கலில் பெண் ஒருவர் மது மயக்கத்தில் ரகளை செய்வதாக திரித்துப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.