YouTurn

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்திய பொருளாதார வழித்தடமே காரணமென பைடன் கூறியதாகப் பரவும் தவறான செய்தி !

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்திய பொருளாதார வழித்தடமே காரணமென பைடன் கூறியதாகப் பரவும் தவறான செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்திய பொருளாதார வழித்தட திட்டமே காரணம்: ஜோ பைடன் குற்றச்சாட்டு

News link | Archive link 

விரிவான விளக்கம்

ந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் (IMEEC) கடந்த ஜி20 உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இத்திட்டத்தின்படி புதிய பொருளாதார வழித்தடமானது இந்தியாவின் மும்பையில் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் வழியாக கிரீஸ் நாடு வரை அமைய உள்ளது.

இந்த வழித்தட திட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் காரணமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார் என ஆங்கில ஊடகங்களிலும், இந்து தமிழ், புதிய தலைமுறை, ஒன் இந்தியா, நக்கீரன் உள்ளிட்ட தமிழ் செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.



உண்மை என்ன ? 

2023 அக்டோபர் 25ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இணைந்து செய்தியாளர் சந்திப்பு வீடியோ மற்றும் ஜோ பைடன் ஆற்றிய உரை வெள்ளை மாளிகையின் யூடியூப் பக்கம் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.





ஜோ பைடன் பேசுகையில்(3வது நிமிடம்), 'ஹமாஸ் தாக்குதலுக்கான காரணங்களில் ஒரு விசயத்தில் எனக்கு உறுதியாக நம்பிக்கை இருக்கிறது. இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. என் உள்ளுணர்வு சொல்கிறது, இது இஸ்ரேலுக்கான பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் எங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றத்தின் காரணத்தினால் தான். எங்களால் அதை அப்படியே விட்டுவிட முடியாது' எனப் பேசியுள்ளார்.

இஸ்ரேலின் பிராந்திய ஒருங்கிணைப்பு என ஜோ பைடன் பேசியது இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை தான் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.





இதையடுத்து, 2023 அக்டோபர் 25ம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த வாரத்தில் இரண்டு தடவை ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். G20 உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட IMEC வழித்தடம், இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் தாக்குதலை தூண்டி இருக்கலாம் என்பது எனது உள்ளுணர்வு எனக் கூறியிருந்தார் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அமெரிக்க அரசின் என்எஸ்ஜி ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, நீங்கள் அவர் பேசியதை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர் கூறியது என்னவென்றால், இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையில் இயல்பாக்கும் செயல்முறை (Normalization Process) மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவை இரு நாடுகளுக்கு இடையே சுமுகமான தீர்விற்கான முக்கிய படியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதுதான் ஹமாஸை தாக்குதலை நடத்த தூண்டியிருக்கலாம் 'எனக் கூறி இருக்கிறார்.

இதன் மூலம், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் முக்கிய காரணமாக இருக்கும் என ஜோ பைடன் கூறவில்லை என்பது தெளிவாகிறது.

முடிவு : 

நம் தேடலில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்திய பொருளாதார வழித்தடமே(IMEEC) காரணம் என ஜோ பைடன் கூறவில்லை. அவர் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என அமெரிக்க அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க