யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்கள்.. இது தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி ஜெய் ஹிந்த்
X link | Archive link

X link | Archive link
விரிவான விளக்கம்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்துவரும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து பாலஸ்தீன முஸ்லீம்கள் தப்பிக்க இந்தியக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள் எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
Archive link
அந்த வீடியோவில் புர்கா அணிந்த பெண்கள் குழுவாக இந்தியக் கொடியை ஏந்திக்கொண்டு செல்கின்றனர். அந்த வீடியோவில் இந்தியில் உள்ள வாக்கியத்தை மொழி பெயர்த்ததில் ‘பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் இருந்து தப்பிக்க இந்தியாவிடம் உதவி பெற வேண்டும்’ என்றுள்ளதை அறிய முடிந்தது.

Facebook link
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோ குறித்து ஆய்வு செய்ததில் இதற்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதைக் காண முடிந்தது.
பாலஸ்தீன முஸ்லிம்கள் எனப் பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அதே வீடியோவினை ‘falak_haq120’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த (2023) ஆகஸ்ட் 31ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்தியில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 2023, அக்டோபர் 7ம் தேதிதான் தொடங்கியது. ஆனால், இந்த வீடியோ அதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் உள்ளது.

அப்பதிவின் நிலைத்தகவலில் (Description) ‘Arabeen walk 2023’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் ‘Arabeen’ என்று தேடியதில், அது முஸ்லீம்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் புனிதப் பயணம் என்று தெரிந்தது.
Arabeen குறித்து ‘அல்ஜசீரா’ தளத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘ஈராக்கில் உலகின் மிகப்பெரிய வருடாந்திர யாத்திரைகளில் ஒன்று' என்று தலைப்பிடப்பட்ட இந்த ஆண்டு நிகழ்வில், உலகம் முழுவதிலும் இருந்து மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் Arabeen நினைவாக கர்பாலாவில் கூடுகிறார்கள்’ என்றுள்ளது. ஷியா முஸ்லீம்கள் இதனை ஒரு முக்கிய நாளாகக் கருதுகின்றனர்.

Arabeen யாத்திரை பற்றி ‘உலகின் மிகப்பெரிய வருடாந்திர புனித யாத்திரை ஈராக்கில் முடிவடைகிறது, 2.5 கோடி ஷியா முஸ்லீம்கள் பங்கேற்கின்றனர்’ என்ற தலைப்புடன் ‘NDTV’ இணையதளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஷியா முஸ்லீம்கள் கர்பலாவுக்குப் பயணம் செய்தனர் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் இருந்து பாலஸ்தீன முஸ்லீம்கள் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியக் கொடியை ஏந்தி செல்வதாகப் பரவும் வீடியோ, Arabeen யாத்திரையின் போது எடுக்கப்பட்டது. அதற்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
மேலும் படிக்க : ‘இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்’: இந்தியாவில் வலதுசாரிகள் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !
இஸ்ரேல் - ஹமாஸ் போருடன் தொடர்புப்படுத்திப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் குழந்தையை சமைத்து கொடுத்ததாகப் பரவும் ஈராக் எம்பி ஐஎஸ்ஐஎஸ் பற்றிப் பேசும் பழைய வீடியோ !
முடிவு :
நம் தேடலில், இஸ்ரேல் தாக்குதலிலிருந்து தப்பிக்கப் பாலஸ்தீன இஸ்லாமியர்கள் இந்தியக் கொடியை ஏந்தி செல்வதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோ இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களில் உள்ளது. அது Arabeen யாத்திரைக்கு இந்தியக் கொடியுடன் சென்ற இந்தியர்கள் எடுத்த வீடியோ என்பதை அறிய முடிகிறது.
*இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்கள்.. இது தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி ஜெய் ஹிந்த் 🇮🇳* pic.twitter.com/ai2mNayAUY
— நரசிம்மன்🇮🇳🕉️🚩💯 follow back. (@Narasim18037507) October 19, 2023