YouTurn

ஈஷா மையத்திற்கு கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதாகப் பரப்பப்படும் தவறான புகைப்படங்கள் !

ஈஷா மையத்திற்கு கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதாகப் பரப்பப்படும் தவறான புகைப்படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஜக்கி காட்டை அழிக்கிறார் என்று கூப்பாடு போடும் உபி கள் கவனத்திற்கு அவருடைய இந்த ஈஷா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அய்யா கருணாநிதி தான் எத்தனை பேருக்கு தெரியும்.

விரிவான விளக்கம்

கோவையில் வனப்பகுதியை ஆக்கிரமித்தும், முறையாக சுற்றுச்சூழல் அனுமதியின்றியும் ஈஷா மைய கட்டிடங்களை கட்டி வருவதாக ஜக்கி வாசுதேவ் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. மறுபுறம், ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர், பிரதமர் என பெரும் அரசியல் தலைவர்களை கலந்து கொள்ளவும் செய்கின்றனர்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி ஈஷா மையத்திற்கு அடிக்கல் நாட்டியதாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.



Twitter link | Archive link 



பரப்பப்படும் பதிவுகளில் கருணாநிதி, அவரின் மனைவி, மகள் கனிமொழி மற்றும் ஜக்கி வாசுதேவ் மரம் நடும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2007ல் ஈஷா சார்பில் 25 மில்லியன் மரங்கள் நடும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தாக 2007ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ஈஷா மையத்தின் இணையதளத்தில் செய்தியாக வெளியாகி உள்ளது.



ஈஷா சார்பில் மேற்கொள்ளப்பட்ட மரம் நடும் விழாவில் கருணாநிதி மற்றும் ஜக்கி வாசுதேவ் மேடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் கருணாநிதியுடன் கனிமொழி மரம் நடும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஈஷா கட்டுரையில் இடம்பெற்று இருக்கிறது. இது தமிழ் செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.



அடுத்ததாக, கருணாநிதி மற்றும் அவரது மனைவியார் இணைந்து மரம் நடும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2006ல் ஈஷா அறக்கட்டளை சார்பாக மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு முழுவதிலும் மரம் நடும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் சென்னையில் அவர்களது இல்லத்தின் முன்பாக மரம் நட்டு தொடங்கி வைத்ததாக " 2006ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி தி ஹிந்து செய்தியில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.



ஈஷா அறக்கட்டளை 1992ம் ஆண்டு ஜக்கி வாசுதேவால் தொடங்கப்பட்டது என ஈஷா அறக்கட்டளையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அப்போது ஆட்சியில் இருந்து அதிமுக. ஈஷா மையத்திற்கு கலைஞர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதாக ஈஷா இணையதளத்திலோ அல்லது செய்திகளிலோ இடம்பெறவில்லை.

மேலும் படிக்க :  ஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா?

மேலும் படிக்க : ஈஷா மையத்தின் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்ததா ?| ஈஷா மீது எழும் வேறொரு குற்றச்சாட்டு!

முடிவு : 

நம் தேடலில், ஈஷா மையத்திற்கு மறைந்த முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதாகப் பரப்பப்படும் புகைப்படங்கள் 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஈஷா அறக்கட்டளையின் சார்பில் மரம் நடும் திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டவை. மேலும், அவை சென்னையில் எடுக்கப்பட்டவை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க