யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பரவிய செய்தி
இவ்வளவு தளவாடங்களும் லக்னோவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. தேசவிரோதிகளுக்கு சிம்ம சொத்தனமாக விளங்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச தலைநகரிலேயே இவ்வளவு குண்டுகள் என்றால், மற்ற மாநிலங்களில் நிலையை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
விரிவான விளக்கம்
உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயதங்களின் புகைப்படம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் புகைப்படத்தில் ஒரு அறை நிறைய துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.
இவ்வளவு தளவாடங்களும் லக்னோவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
தேசவிரோதிகளுக்கு சிம்ம சொத்தனமாக விளங்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச தலைநகரிலேயே இவ்வளவு குண்டுகள் என்றால், மற்ற மாநிலங்களில் நிலையை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
Batenge tohh cutenge pic.twitter.com/B13sgdBYeo
#लखनऊ के हकीम #सलाहुद्दीन के घर से 3000 बंदूकें और
50 हजार गोलियों की मैगजीन बरामद हुई है....
सोचिये ये लोग कहाँ तक तैयारी करके बैठे हैं और
आपको ब्राह्मण-यादव लड़ाई में उलझाया जा रहा है। pic.twitter.com/UOVWtSdhbR
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், லக்னோவில் ஆயுதங்களை தயாரித்தது மட்டுமல்லாமல், காஷ்மீர் வரை அவற்றைக் கடத்துவதிலும் ஈடுபட்ட ஹக்கீம் சலாவுதீன் என்ற நபர் கைது செய்யப்பட்டது குறித்து “Free Press Journal” ஊடகப் பக்கத்தில் ஜூன் 28 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

எனவே உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டது உண்மையே என்பதை அறிய முடிந்தது.
மேலும் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் இந்த புகைப்படம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்று கூறி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே “Wisgoon” தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

இதன் மூலம், பரவி வரும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், உத்தரப்பிரதேச தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் புகைப்படம் என்று கூறி பரவும் புகைப்படம் கடந்த 2017-ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம். இதற்கும் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆயுதங்கள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.