YouTurn

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு வேளாண் கல்லூரி கூட இல்லையா? உண்மை என்ன?

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு வேளாண் கல்லூரி கூட இல்லையா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்” கடந்த 2014 ஆம் ஆண்டே தஞ்சையில் தொடங்கப்பட்டது. தற்போது இங்கு 638 மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண் கல்லூரியே இல்லை. 


Youtube Link:

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கள நிலவரம் குறித்த வீடியோ ஒன்றில் பேசியுள்ள ஒருவர், “ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண் கல்லூரியே இல்லை” என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இவர் பேசி விகடன் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு வேளாண் கல்லூரி கூட இல்லை எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிந்தது. 


தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இது குறித்து தேடியதில், “டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்” கடந்த 2014 ஆம் ஆண்டே தஞ்சாவூரில் உள்ள ஈச்சங்கோட்டையில் தொடங்கப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்ய முடிந்தது. ஆரமபத்தில் 60 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில், தற்போது இங்கு 638 மாணவர்கள் படித்து வருகின்றனர். 



முதலில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கல்லூரி என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு, “டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



முடிவு: 


நம் தேடலில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு வேளாண் கல்லூரி கூட இல்லை எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க