YouTurn

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலியா? உண்மை என்ன?

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலியா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

விஜய் பிரச்சாரம் செய்யும் வாகனத்தில் விஜய்யின் புகைப்படமே இடம் பெற்றிருக்கும். ஆனால் பரவி வரும் வாகனத்தின் புகைப்படத்தில் விஜய்யின் புகைப்படம் இடம்பெறாமல், வேறு ஒருவரின் புகைப்படமும், புரியாத சில வாக்கியங்களும் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலிகள் எதுவும் போடப்படவில்லை.

பரவிய செய்தி

உலகத்துலேயே ராணுவ வாகனத்திற்கு அடுத்து பஸ்ஸூக்கு கம்பி வேலி போட்ட ஒரே கோஷ்டி நம்ம ஆட்கள் தான்..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று (செப். 20) நாகப்பட்டினம், திருவாரூரில் மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். 

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பயணம் செய்யும் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலி போடப்பட்டுள்ளதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை நன்கு ஆய்வு செய்ததில், அது விஜய்யின் உண்மையான பிரச்சார வாகனம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


விஜய் பிரச்சாரம் செய்யும் வாகனத்தில் விஜய்யின் புகைப்படமே இடம் பெற்றிருக்கும். ஆனால் பரவி வரும் வாகனத்தின் புகைப்படத்தில் விஜய்யின் புகைப்படம் இடம்பெறாமல், வேறு ஒருவரின் புகைப்படமும், புரியாத சில வாக்கியங்களும் அச்சிடப்பட்டுள்ளன. 



மேலும் பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், பாலிமர் செய்தி, “த.வெ.க கொடி வண்ணம்... அண்ணா, எம்ஜிஆர், விஜய் புகைப்படம்... உங்க விஜய் நான் வரேன் வாசகம்... தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்காக தயாரான பிரசார வாகனம் இதுதான்..!” என்று குறிப்பிட்டு கடந்த செப்டம்பர் 12 அன்று வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. வீடியோவில் காட்டப்பட்டுள்ள விஜய்யின் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலிகள் எதுவும் போடப்படவில்லை. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Polimer News (@polimernews)


மேலும் இந்த வீடியோவில் உள்ள ஒரு காட்சியையே, எடிட் செய்து சமூக ஊடகங்களில் இவ்வாறு தவறாகப் பரப்பியுள்ளனர் என்பதையும் அறிய முடிந்தது. 



முடிவு: 


நம் தேடலில், நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலி போடப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.