YouTurn

பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறக்கும் காட்சி! உண்மை என்ன?

பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறக்கும் காட்சி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விடியல் அரசின் சாதனை. ஓடும் அரசுப் பேருந்தின் கூரை பறந்ததால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

பொள்ளாச்சியில் ஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறக்கும் காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் வீடியோவுக்கு "இது திமுக அரசின் சாதனை" எனத் தலைப்பிட்டு பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீஃபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2019 ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதைக் காணமுடிகிறது.



மேலும் புதிய தலைமுறை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அன்றே, பரவி வரும் வீடியோவில் காட்டப்படும் அதே பேருந்தைக் குறிப்பிட்டு தனது யூடியூப் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் "பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து ஒன்றின் மேற்கூரை சேதமடைந்தது. அப்போது பேருந்தில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.



இதே போன்று The Hindu கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியிலும், பரவி வரும் வீடியோவில் காட்டப்பட்டுள்ள அதே பேருந்து எண்ணைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், "வழித்தட எண் 30-ல் நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் 'TN 38 N 2769' என்ற பதிவு எண் கொண்ட பேருந்து, நடுப்புனியில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. வடக்கிபாளையம் அருகே உள்ள கொங்கநாட்டன்புதூரில் பேருந்து மேல்தளத்தில் ஏறும்போது மேற்கூரை உடைந்து விழுந்தது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



 

இதன்மூலம் 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சி அருகே பேருந்து ஒன்றின் மேற்கூரை சேதமடைந்த பழைய வீடியோவை, தற்போது நடந்த சம்பவம் என்று கூறி சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: தற்காலிக பேருந்து ஓட்டுநர்களால் நிகழ்ந்த விபத்துகள் எனப் பரவும் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் !

மேலும் படிக்க: சென்னை கனமழையால் சாலையில் கவிழ்ந்த பேருந்து எனப் பரவும் 2018-ன் வீடியோ !

முடிவு:

நம் தேடலில், பொள்ளாச்சியில் ஓடும் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறக்கும் காட்சி எனப் பரவும் வீடியோ 2019ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறியமுடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க