YouTurn

பழங்குடியின MLAவுக்கு திமுக உயர்மட்ட தலைமை அஞ்சலி செலுத்தச் செல்லவில்லையா?

பழங்குடியின MLAவுக்கு திமுக உயர்மட்ட தலைமை அஞ்சலி செலுத்தச் செல்லவில்லையா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பரவிய செய்தி

கட்சியின் தலைவரோ, பொதுச் செயலாளரோ, பொருளாளரோ சென்றிருக்க வேண்டும்.  மூத்த அமைச்சர்கள் சென்றிருக்க வேண்டும்.  ஆனால் யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இதுதான் உங்கள் சமூக நீதியா ? முதல்வர் மு.க.ஸ்டாலின்?

Link / Archive Link

விரிவான விளக்கம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.பொன்னுசாமி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தார்.

 

இந்நிலையில், இறந்த கு.பொன்னுசாமி பழங்குடியினத்தை சேர்ந்தவர். அவரது இறப்புக்கு கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்ற உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுதான் திமுகவின் சமூக நீதியா ? என்று சவுக்கு சங்கர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.



உண்மை என்ன?

 

சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி இறந்தது குறித்த செய்திகளை இணையத்தில் தேடியபோது, ‘தினமணி’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.


 

அதில், ‘கடந்த அக்டோபர் 24ஆம் தேதியன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய செய்தி புகைப்படங்களுடன் துணை முதல்வரின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இறந்த சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமிக்கு நேரில் சென்று துணை முதல்வர் அஞ்சலி செலுத்தியுள்ளது தெளிவாகிறது.


மேலும் அவரது உடலுக்கு நாடாளுமன்ற (ராஜ்ஜிய சபா) உறுப்பினர் ராஜேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட திமுகவினரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

முடிவு:

 

சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்த திமுகவின் உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் செல்லவில்லை என்று சவுக்கு சங்கர் தவறாக தகவலை பரப்பி வருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.