YouTurn

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது அதிமுக நிர்வாகி எனப் பரவும் போலி செய்தி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது அதிமுக நிர்வாகி எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கள்ளக்குறிச்சி விவகாரம் 8 பேர் தலைமறைவு! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு; பிரபு மீது 10'க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் 114 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும்நிலையில் இன்னும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி தலைமறைவு என்று கூறி 'நியூஸ்7 தமிழ்' ஊடகத்தின் 'செய்தி அட்டை' ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு. பிரபு மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





உண்மை என்ன?

பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், கருணாபுரம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக இதுவரை கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அறியமுடிந்தது.

இதுகுறித்து இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள செய்தியில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் கொத்துகொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டதும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரனிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

"சின்னத்துரை என்பவர், மெத்தனால் கலந்த சாராயத்தை தன்னிடம் விற்றதாக போலீஸாரிடம் கோவிந்தராஜ் தெரிவித்த நிலையில், சின்னதுரையும் கைது செய்யப்பட்டார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதுதவிர மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, கலைஞர் செய்திகள் வெளியிட்டுள்ள செய்தியில், "சிபிசிஐடி மேற்கொண்ட விசாரணையில் ஜோசப் ராஜா என்பவர் சின்னத்துரைக்கு மெத்தனாலை விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதுகுறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு குறித்தோ, 8 பேர் தலைமறைவான செய்தி குறித்தோ எதிலும் செய்தி வெளியிடப்படவில்லை என்பதை உறுதிசெய்ய முடிகிறது.

மேலும் இதுகுறித்து 'நியூஸ்7 தமிழ்' ஊடகத்தின் சமூக ஊடகப்பக்கங்களிலும் தேடித் பார்த்தோம். "இந்த தகவலை 'நியூஸ்7 தமிழ்' வெளியிடவில்லை" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர். எனவே 'நியூஸ்7 தமிழ்' வெளியிட்டதாகக் கூறி பரவி வரும் 'செய்தி அட்டை' போலியானது என்பது தெளிவாகிறது.



முடிவு:

நம் தேடலில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக நிர்வாகி பிரபு உட்பட 8 பேர் தலைமறைவு என்று குறிப்பிட்டு பரவி வரும் 'நியூஸ்7 தமிழ்' ஊடகத்தின் 'செய்தி அட்டை' போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க