YouTurn

'சிவகங்கையில் ரூ.2 க்கு 50 மிலி மண்ணெண்ணெய் விநியோகம்.. காரணம் தமிழ்நாடு அரசு தான்' எனப் பரவும் தவறான செய்தி!

'சிவகங்கையில் ரூ.2 க்கு 50 மிலி மண்ணெண்ணெய் விநியோகம்.. காரணம் தமிழ்நாடு அரசு தான்' எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ரூ.2-க்கு 50 மில்லி மண்ணெண்ணைய். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி ரேசன் கடையில் நடந்த வினோதம். ரூ.2-க்கு 50 மில்லி மண்ணெண்ணைய் வழங்கியதால் மக்கள் அதிர்ச்சி!



X Link | Archive Link


விரிவான விளக்கம்

தமிழ்நாடு முழுவதுமே நியாய விலை கடைகளின் மூலம் மானிய விலையில், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற பொருள்களும், விலை இல்லா அரிசியும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் "சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி ரேசன் கடையில் நடந்த வினோதம், ரூ.2-க்கு 50 மில்லி மண்ணெண்ணைய் வழங்கியதால் மக்கள் அதிர்ச்சி" என்று கூறி நியூஸ் ஜெ ஊடகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனை பலரும் இதற்கு காரணம் தமிழ்நாடு அரசு தான் என்று கூறி விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வாங்குபவர்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசே நிர்ணயித்து வருகிறது என்பதை அறிய முடிந்தது.

இது குறித்து நியூஸ்18 ஏப்ரல் 28 அன்று "தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பிற்கான காரணம் இதுதானா?!" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து மாதந்தோறும் 75 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது போல் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 45.20 லட்சம் லிட்டராகவும், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27.12 லட்சம் லிட்டராகவும் பாதிக்கு பாதி குறைத்துவிட்டது.

இதனால் கார்டுதாரர்களுக்கு தலா 2 முதல் 3 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்படு வந்த நிலையில் 2023 இல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்பட்டது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு கடந்த 2022 இல் இருந்தே பாதிக்கு பாதி குறைத்துவிட்டது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.



மேலும் இது குறித்து புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியையும் காண முடிந்தது. அதில், ஒன்றிய அரசு படிப்படியாக மண்ணெண்ணெய் வழங்குவதை குறைத்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி நியாய விலை கடையில் 950 அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அங்கு வெறும் 38 லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, அனைத்து அட்டைதாரர்களுக்கும் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்த ரேஷன் கடை பணியாளர், ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாய்க்கு 50 மில்லி அளவு மண்ணெண்ணெய் விநியோகம் செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

மண்ணெண்ணெய் வழங்குவதை ஒன்றிய அரசு ஏன் குறைத்துள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் கடந்த டிசம்பர் 14 அன்று "சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை சமாளிக்க பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ராமேஸ்வர் டெலி" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், "ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறியதாவது: தமிழ்நாட்டிற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ஆண்டுதோறும் குறைத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து திமுக தலைவர் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தமிழ்நாட்டிற்கான பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 2018-2019 இல் 1,93,776 KLலிருந்து 2022-2023ல் 54,240 KL ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, மானியமில்லாத மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 2018-2019 இல் 17,040 KLலிருந்து 2022-2023ல் 7536 KL ஆகக் குறைந்தது. அதிகரித்த உள்நாட்டு எல்பிஜி/பிஎன்ஜி இணைப்புகள், அதிகரித்துள்ள மின்சார இணைப்புகள் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



முடிவு:

நம் தேடலில், சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி நியாய விலை கடையில் 950 அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அங்கு வெறும் 38 லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் தான் ரூ.2 க்கு 50 மிலி மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வாங்குபவர்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசே நிர்ணயித்து வருகிறது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க