YouTurn

‘அனைவருக்கும் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம்’ - இனி இல்லையா? பரவும் வதந்தி!

‘அனைவருக்கும் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம்’ - இனி இல்லையா? பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல் 100 யூனிட்டுகள் இலவசமாக தொடந்து வழங்கப்படும் என்றே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

பரவிய செய்தி

தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மே 10 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில், 59 ஆண்டுகளுக்கு பின், திமுக., அதிமுக. அல்லாத புது கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. 


பதவியேற்ற பின், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உட்பட மூன்று முக்கிய கோப்புகளில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். 


இந்நிலையில், இந்த அறிவிப்பின் படி “தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 


வாழ்த்துக்கள் 😂 pic.twitter.com/VX23BrimvW

— Mr.D (@DasthuB) May 10, 2026


உண்மை என்ன?


தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, மூன்று முக்கிய அரசாணைகளில் அவர் கையொப்பமிட்டார். அதன்படி, '500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும்' என அறிவித்தார். 


இந்நிலையில் பரவி வரும் செய்திகளில் உள்ளவாறு, தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஆய்வு செய்தோம். 


#TANGEDCO #TNEB #TNPDCL #FIRSTSIGNATURE #UNITSFREE #தமிழ்நாடுமின்வாரியம் #TNDIPR pic.twitter.com/Wgo6vb5N49

— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) May 10, 2026


அதன்படி, தமிழ்நாடு அரசின் அறிவிப்பில், "500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல் 100 யூனிட்டுகள் இலவசமாக தொடந்து வழங்கப்படும்" என்றே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதே சமயம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது என அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


முடிவு: 


நம் தேடலில்,  தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் படி, “தற்போது நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட் மின்கட்டணம் இலவசம் என்பது நீக்கப்பட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முழு யூனிட்டிற்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்” எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க