YouTurn

ஈரானில் ஆட்சி மாற்றத்திற்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஈரானில் ஆட்சி மாற்றத்திற்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் என பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் அனைத்தும் கடந்த 2022ஆம் ஆண்டு 'மஹ்ஸா அமினி' என்ற பெண் ஈரான் ஒழுக்கப் போலீஸாரால் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டங்களின் போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

இஸ்லாமிய குடியரசு எங்கள் நாட்டை விட்டு வெளியேறு. ஈரான் தெஹரான் பகுதி கல்லூரி மாணவர்கள் போராட்டம் .


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

கடந்த ஜீன் 13ஆம் தேதியன்று, ஈரானின் அணு சோதனைச் சாலைகள் மற்றும் இராணுவத்தளங்களை இஸ்ரேல் தாக்கியது. அதில் ஈரானின் அணு விஞ்ஞானிகளும் இராணுவ உயர்மட்டத் தலைவர்களும் கொல்லப்பட்டார்கள். இதனால் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்கனவே பல ஆண்டுகளாக நிலவி வந்த  மோதல் போக்கு தற்போது தீவிரமாகியுள்ளது.


இருநாடுகளுக்கு இடையில் தாக்குதல் நடந்துவரும் இந்த சூழலில்,  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஈரானில் நடந்துவரும் அடக்குமுறை ஆட்சியை ஈரான் மக்கள் தூக்கி எறிய அவர்களுக்கு இதுவே நல்ல சந்தர்ப்பம்’ என்று கூறினார்.


இந்நிலையில் சில போராட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை பதிவிட்டு, ஈரானில் தற்போதைய ஆட்சியாளர்கள் வெளியேறவேண்டும்; ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ளதாக’ பாஜகவைச் சேர்ந்தவர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்.

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களை கொண்டு தேடினோம். அதில் அனைத்தும்  ’மஹ்ஸா அமினி’ என்ற பெண் ஈரான் ஒழுக்கப் போலீஸாரால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. 



கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 'மஹ்ஸா அமினி' ஹிஜாப் சரியான முறையில் அணியாததற்காக ஈரான் நாட்டின் ஒழுக்கப் போலீஸாரால் (morality police) கைது செய்யப்பட்டார். சில நாட்கள் சென்று, அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ’மஹ்ஸா அமினி’ ஈரான் ஒழுக்கப் போலீஸாரால் கொலை செய்யப்பட்டதாக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. 



அதில், பெண்கள் ஹிஜாப் அணிவதை ஒழுங்குபடுத்துவது என்பது அவர்களின் அடிப்படையான ஆடைச் சுந்திரத்தில் தலையிடுவாத இருக்கிறது. இதனால், தங்களது தனிமனித உரிமையை நிலைநாட்டும் வகையில், பெண்கள் தங்களது ஹிஜாப் துறந்து போராட்டதில் கலந்துகொண்டனர். அப்போது சில பெண்கள் தங்களது ஹிஜாப்பை நெருப்பில் போட்டு அடக்குமுறைக்கு எதிரான தங்களது குரலை பதிவு செய்தனர். 


image.png


போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் "பெண், சுதந்திரம், வாழ்க்கை” என்ற வாசகத்தை சுவர்களில் எழுதினர். 


மேற்கூறிய விவரங்களிலிருந்து பார்க்கையில், இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் அனைத்தும் கடந்த 2022ஆம் ஆண்டு  'மஹ்ஸா அமினி' என்ற பெண் ஈரான் ஒழுக்கப் போலீஸாரால் கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டங்களின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.


முடிவு:


கடந்த 2022ஆம் ஆண்டு 'மஹ்ஸா அமினி' கொலையை கண்டித்து நடந்த போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை, தற்போது  ஈரானில் கல்லூரி மாணவர்கள் ஆட்சி மாற்றத்தாக போராட்டம் நடத்தி வருவதாக தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க