YouTurn

ஐபிஎல் போட்டியில் '2 Years of Worst திராவிட மாடல்' என்ற பதாகையை காண்பித்ததாகப் பரவும் எடிட் செய்த படம் !

ஐபிஎல் போட்டியில் '2 Years of Worst திராவிட மாடல்' என்ற பதாகையை காண்பித்ததாகப் பரவும் எடிட் செய்த படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

2 Years of Worst திராவிட மாடல். Worst.. உண்மை தானே



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு, கடந்த 2 ஆண்டுகள் சாதனை தொடர்பான கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் மே 6ம் தேதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், திமுகவின் 2 ஆண்டுகள் ஆட்சிக்கு ஆதரவான மற்றும் எதிரானப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் ரசிகர் ஒருவர் " 2 Years of Worst திராவிட மாடல் " என எழுதப்பட்ட பதாகையை ஏந்தி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிமுகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 மே 7ம் தேதி PandianAdv.தமிழ்நாடு எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இதே புகைப்படத்தில் உள்ள பதாகையில் "2 Years of திராவிட மாடல் " என்றே உள்ளது. 



Twitter link | Archive link 

மே 6ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே-மும்பை அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் "2 Years of திராவிட மாடல் " என பதாகை ஏந்தி இருக்கும் புகைப்படத்தை திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. 



ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களுக்கு மத்தியில் காண்பிக்கப்பட்ட பதாகையில் Worst என எடிட் செய்து இருப்பதைத் தெளிவாக காண முடிந்தது.

மேலும் படிக்க : தி கேரளா ஸ்டோரி : முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி பாராட்டியதாகப் பரவும் போலிச் செய்தி !

மேலும் படிக்க : மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவான போராட்டத்திற்காக முஸ்லீம்கள் சீக்கியர் வேடம் அணிவதாகப் பரப்பப்படும் தவறான வீடியோ !

முடிவு : 

நம் தேடலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரசிகர் ஒருவர் ஏந்திய பதாகையில் 2 Years of Worst திராவிட மாடல் என இடம்பெற்றதாகப் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க