யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கண்களுக்குப் புலப்படாத ஆடை சந்தைக்கு வந்து விட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் ஒருவர் தன்னிடம் உள்ள கண்ணுக்குத் தெரியாத மேலாடையை அணிகிறார். பிறகு அவரது உடலின் மேல் பகுதி மறைந்து விடுகிறது.
Archive link
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இதே வீடியோ ’Ashutosh Shah’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த (பிப்) 22ம் தேதி பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அப்பதிவில், ”Invisible cloth blazer (Just for fun)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கொண்டு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்ததில், இதே போன்று கண்ணுக்குத் தெரியாத சட்டை மற்றும் பேண்ட் அணிவது போன்ற வேறொரு வீடியோவையும் காண நேர்ந்தது. அப்பதிவிலும் ‘Just for fun’ என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த வீடியோவில் அருகில் உள்ள கண்ணாடியில் கண்ணுக்குத் தெரியாத ஆடை எனச் சொல்லப்படுகிற ஆடை தெரிகிறது. அது மட்டுமின்றி மேலாடையில் உள்ள எழுத்துக்களும் அவ்வப்போது தெரிவதைக் காண முடிகிறது.

இதற்கு முன்னரும் இதே போன்று பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. அவ்வீடியோக்கள் பற்றி அப்போதே யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பச்சை அல்லது நீல நிற துணியைக் கொண்டு ஒரு நபரோ அல்லது பொருளோ மறைவது போன்று வீடியோ எடுத்து, பின்னர் அதனை எடிட்டிங் சாப்ட்வேர் உதவியுடன் எடிட் செய்து இவ்வாறு கண்ணுக்குத் தெரியாதபடி மாற்றுகின்றனர். தற்போது பரவக் கூடிய வீடியோவும் அத்தகைய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டதுதான்.
மேலும் படிக்க : ஆளையே மறைய வைக்கும் துணி கண்டுபிடிப்பு என எடிட்டிங் வீடியோவை பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி !
மேலும் படிக்க : ஆளையே மறைய வைக்கும் துணி: புதிய கண்டுபிடிப்பா ?
முடிவு :
நம் தேடலில், கண்ணுக்குப் புலப்படாத ஆடை வந்து விட்டதாகப் பரவும் வீடியோ பற்றிய தகவல் உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட வீடியோ.
இதுக்கு அப்புறம் என்னலாம் செய்ய காத்திருக்கானுவ தெரியல pic.twitter.com/iI52MeEei1
— ❤️°°ட்விட்காதலன்°°❤️ (@Elanthaari_Paya) February 25, 2024