YouTurn

‘PM-WANI’ திட்டம் முற்றிலும் இலவசமாக WI-FI சேவை வழங்குகிறதா?

‘PM-WANI’ திட்டம் முற்றிலும் இலவசமாக WI-FI சேவை வழங்குகிறதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

PM-WANI திட்டம் கடைகள் போன்ற வணிக இடங்களுக்கானது என்பதைத் திரித்து அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் இணையதள சேவை கிடைக்கும் என்று தவறாகப் பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

Free WiFi திட்டம்! 100% Free. இதுதான் Digital India. PM-WANI திட்டம் வீட்டில் free WiFi அமைக்கும் மத்திய அரசு திட்டம்.



Instagram Link:

விரிவான விளக்கம்

‘Hidden hands’ என்ற இன்ஸ்டாகிராம் தளத்தில் பேசும் ஒரு சமூக ஊடகப் பிரபலர் (Influencer), PM-WANI என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு முற்றிலும் இலவசமாக WI-FI வழங்கப்படும் என்று குறிப்பு (Caption) எழுதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் பேசிய வீடியோவில் மிகக் குறைந்த விலையில் WI-FI வழங்கும் திட்டம் இது என்று மாற்றிப் பேசுகிறார்.


#PMWANI #பிஎம்_வாணி_யோஜனா #FreeWiFi pic.twitter.com/QUTiQX51Qm

— Vision of Jeevitha (@JeevithaBJP) November 30, 2025


உண்மை என்ன?

 

PM-WANI’ என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து இணையத்தில் தேடினோம். இத்திட்டம் சிறு வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு இலவச வைஃபை கொடுப்பதற்கான திட்டம் ஆகும். இத்திட்டத்தின் படி வைஃபை இணைப்பு வணிக நிறுவனங்களுக்கு அல்லது கடைகளுக்கு இலவசமாக வழங்கப்படுவதில்லை. கடை உரிமையாளர்கள் பணம் கட்டி வைஃபை வசதியைப் பெற்று அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாய் இணையதள சேவை வழங்குவதற்கான திட்டம் இது.


 

Public Data Offices (PDO) என்று சொல்லப்படக்கூடிய சிறு கடை உடைமையாளர்கள் இந்த இணைப்பை பெறுவதற்காக ‘Router’ என்ற வன்பொருளை (Hardware) விலைக்கு வாங்க வேண்டும். அதுபோக, WI-FI இணைப்பை பெறுவதற்கான சில ஆரம்பகட்ட செலவுகளையும் (some initial setup charges) ஏற்கவேண்டும்’ என்று PM WANI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த திட்டத்தை பற்றி விளக்கப்பட்டுள்ள ஆவணத்திலும், WI-FI இணைப்பு பெற தேவையான வன்பொருளை (Router) அமைப்பதற்கான செலவு பற்றியும், இணைய சேவையின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து மாதம்தோறும் செலுத்த வேண்டிய தொகை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

அதாவது, WI-FI அமைப்பு பெற செலுத்தப்படும் உரிமத் தொகையிலிருந்து (license fee) மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, WI-FI இணைப்புக்கு தேவையான வன்பொருள், இணைய தரவுகள் சேவை ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

 

ஆனால் இதனைத் திரித்து, PM-WANI திட்டத்தின் கீழ் 100 சதவீதம் இலவசமாக WI-FI சேவையை பெறலாம் என்று வீடியோவின் குறிப்பில் தவறாக எழுதியுள்ளார்கள். ஆனால் வீடியோவில் பேசும் போது குறைந்த செலவில் WI-FI திட்டம் என்று மாற்றி பேசுகிறார்கள். அதேபோல் இது தனிநபர்கள் மற்றும் வீடுகளுக்கான சேவை என்பதைப் போல தவறாகத் திரித்தும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 

பார்வையாளர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இது போன்று ‘முற்றிலும் இலவசம், 100 சதவீதம் இலவசம்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஒரு யுத்தியாகவே சமூக ஊடகப் பிரபலங்கள் கையாள்கிறார்கள். இது பார்வையாளர்களை "தவறாக வழிநடத்தும் அல்லது உண்மையை திரிக்கும் செயல்" என்று அவர்கள் சிந்திப்பதில்லை.

 

முடிவு:

 

PM-WANI திட்டம் கடைகள் போன்ற வணிக இடங்களுக்கானது என்பதைத் திரித்து அனைவருக்கும் இத்திட்டத்தின் மூலம் இணையதள சேவை கிடைக்கும் என்று தவறாகப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க