YouTurn

மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஊசி செலுத்தப்படுவதாகப் பரவும் வதந்தி!

மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஊசி செலுத்தப்படுவதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மீன்கள் பல நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க  கடலில் மீனை பிடித்த உடனேயே மீன் உடலில் ஊசி மூலம்  ரசாயன மருந்து செலுத்தப்படும் காட்சி… அந்த மீன்களை சாப்பிடுகிற மனுஷன் ??????? 


X link

விரிவான விளக்கம்

மீன்கள் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்க கடலில் இருந்து பிடித்தவுடனே அதன் உடலில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக ஒரு வீடியோ வாட்சாப் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. 

[video width="360" height="640" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/06/VID-20240619-WA0043.mp4"][/video]

Facebook link



உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களைக் கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே மாதிரியான வீடியோ ஒன்று ’Star Fish Farm என்ற விவசாயம் தொடர்பான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில், இன்னும் சில தினங்களில் எல்லா வகை மீன்குஞ்சுகளும் கிடைக்குமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மீன்வளர்ப்பு பண்ணைகள் மீன்குஞ்சுகளின் உற்பத்திக்காக சினை ஊசிகளை பயன்படுத்துவது வழக்கம். மாடு கருத்தரிக்க கூட இத்தகைய சினை ஊசிகள் பயன்படுத்தப்படுகிறது. மீன்களுக்குச் சினை ஊசி போடுவது தொடர்பாக யூடியூபில் உள்ள வீடியோக்களை பார்த்தோம். அவற்றில் மீனின் பக்கவாட்டில் உள்ள துடுப்புகளுக்குக் கீழ்தான் சினை ஊசி போடப்படுகிறது. ஆனால், பரவக்கூடிய வீடியோவில் மீனின் உடலில் ஊசி செலுத்தப்படுகிறது. 

இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில், ’SDS மீன் பண்ணை’ உரிமையாளர் சாமிநாதன் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். ”இந்த வீடியோவில் இருப்பது கடல்மீன் இல்லை. அவை பண்ணையில் வளர்க்கக்கூடிய மீன்கள். அவற்றுக்கு போடக்கூடியதும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான ஊசி கிடையாது. அது சினை ஊசி” என விளக்கினார். 

மேலும் அவர் கூறுகையில், ”மீன் போன்ற உணவுப்பொருள்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஃபார்மலின் (Formalin) எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப் பயன்படுத்தக்கூடாது. அதுவும் ஊசி மூலம் ஃபார்மலினை மீனின் உடலில் செலுத்தினால் மீன் கெட்டுப்போகாமல் தடுக்கமுடியாது. அது தோலின் மேற்பகுதியில் பயன்படுத்தினால் தான் கவசம்போல் செயல்பட்டு மீனைக் கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும். சில நிறுவனங்கள் மீனைப் பதப்படுத்துவதற்கான ஐஸ் கட்டிகள் தயாரிக்கும்போது அந்தத் தண்ணீரிலேயே ஃபார்மலினை கலந்து விடுகின்றனர்” என்றார். 

எனவே, இதன்மூலம் பரவக்கூடிய வீடியோவில் மீனுக்குச் செலுத்தக்கூடியது சினை ஊசி என்பதை உறுதி செய்யமுடிகிறது. மீன்களின் முட்டையிடும் திறனை அதிகரிக்க போடப்படும் ஹார்மோன் ஊசி மீனின் பக்கவாட்டு துடுப்பிற்கு கீழோ அல்லது உடலிலோ செலுத்தப்படும் என்பதை ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றின் மூலமாகவும் உறுதிப்படுத்தினோம்.

 



ஃபார்மலின் பயன்படுத்தியதைக் கண்டறியும் சோதனை:

மீன், நண்டு போன்ற கடல் உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃபார்மலின் எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவது உண்டு. இந்த வேதிப்பொருள் உணவுப் பொருட்களில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சிலர் சட்டத்திற்குப் புறம்பாக இதனை உணவுப் பொருட்களில் பயன்படுத்துகின்றனர். பொதுவாக இது இறந்த உடல்களைப் பதப்படுத்த உபயோகப்படுத்தும் ஒரு பொருளாகும்.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ்பாபு புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஃபார்மலின் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளைக் கண்டறிவது தொடர்பாக விளக்கியுள்ளார். 

"வெறும் கண்களால் ஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டுபிடிக்கவே முடியாது. 'ஃபார்மலின் ரீ ஏஜெண்ட் டெஸ்ட் கிட்' மூலமே கண்டுபிடிக்க முடியும். இதனை, ஆய்வகங்களில்தான் செய்யவேண்டும் என்றில்லை. பொதுமக்களே சோதனை செய்துகொள்ள அனுமதி உண்டு. ஃபார்மலின் ரீ ஏஜெண்டை (Formalin Reagent) மீன் மீது ஒரு சொட்டு ஊற்றியதும் ஃபார்மலின் கலந்திருந்தால் அது 2 நிமிடங்களில் ரோஸ் நிறத்தில் மாறிவிடும். அப்படி நிறம் மாறவில்லை என்றால் அது ஃபார்மலின் கலக்காத மீன்” எனக் கூறியுள்ளார்.

முடிவு:

மீன்கள் பல நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்க ஊசி செலுத்தப்படுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பரவக்கூடிய வீடியோவில் மீனுக்குச் செலுத்தப்படுவது சினை ஊசி.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க