யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய பெண் விமானி என்று பரப்பப்படும் புகைப்படம் ஒன்றும், இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக ஒரு வீடியோவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வைரலாகி வருகிறது.
பரவிய செய்தி
Claim 1 :
Please make me some tea...
#IndiaPakistanWar #Pakistan #PakistanZindabad #PakistanArmy #pakistanindiawar

Claim 2 :
Indian posts blown up
#PakistanZindabad #FreeImranKhan #IndiaPakistanWar

விரிவான விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டனர்” என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய பெண் விமானி என்று பரப்பப்படும் புகைப்படம் ஒன்றும், இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக ஒரு வீடியோவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வைரலாகி வருகிறது.
کوئی چائے تو پلا دو۔۔۔ ☕#IndiaPakistanWar #Pakistan #PakistanZindabad #PakistanArmy #pakistanindiawar pic.twitter.com/HedJRaGi0Y
உண்மை என்ன ?
Claim : 1
முதலில் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியப் பெண் விமானி என்று பரவிய புகைப்படம் குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது SSBCrackExams என்ற இணையத்தள பக்கத்தில் ஜூன் 2, 2023 அன்று, "IAF Kiran Trainer Jet Crashes in Karnataka: Both Pilots Safe" என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில் கர்நாடகா மாநிலம் போகபுரா கிராமத்திற்கு அருகிலுள்ள சாமராஜ் நகரில் இந்திய விமானப்படையின் (IAF) இலகுரக கிரண் ஜெட் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது என்றும், இதிலிருந்த இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதே போல், Times Now, Business Standard போன்ற ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Claim : 2
இதையடுத்து இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக ஒரு காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இது குறித்து நாங்கள் தேடிப் பார்த்தோம். அப்போது eMazay என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் காணொளியைப் பார்க்க முடிந்தது. "Someone tell Indians how they are killed like this, how do the brave soldiers of the Pakistan Army kill them", என்ற தலைப்பில் 15 நவம்பர் 2020 அன்று வெளியாகியிருந்ததைக் காணமுடிந்தது.
மேலும் பரவி வரும் காணொளி குறித்துத் தேடிய போது, வேறு எங்கும் இது குறித்தான தகவல்கள் கிடைக்கவில்லை.
எனவே இந்த காணொளி 2020ல் இருந்தே பரப்பப்பட்டு வருவதை உறுதி செய்யமுடிந்தது.
முடிவு :
நம் தேடலில், பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியப் பெண் விமானி என்று பரப்பப்படும் புகைப்படம் போலியானது. உண்மையில் அந்தப் படம் கர்நாடகாவில் நடந்த IAF கிரண் பயிற்சி ஜெட் விபத்துகளிலிருந்து எடுக்கப்பட்டது. அதே போல் இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. இந்த காணொளி முதலில் YouTube இல் 15 நவம்பர் 2020 அன்று பதிவேற்றப்பட்டது.