YouTurn

பாகிஸ்தானின் கிரானா மலை பகுதியில் தாக்குதல் நடத்தியதா இந்தியா? உண்மை என்ன?

பாகிஸ்தானின் கிரானா மலை பகுதியில் தாக்குதல் நடத்தியதா இந்தியா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் காணொளி 2015ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனாவில், சவூதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்டதாகும். இதற்கும் சமீபத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு எந்த தொடர்புமில்லை.

பரவிய செய்தி

*கிரானா மலை :* அணுகுண்டை பதுக்கி வைத்து பாதுகாக்கும் பாகிஸ்தானில் இருக்கும் இடம். அதன் வாசலில் துல்லியமாக தாக்கி உலகிற்கே எச்சரிக்கை தந்த இந்தியா. இதைத்தான் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறினார்கள்...

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் மோதலுக்கு பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் கிரானா மலையில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது, மே 11,2015 அன்று Yusra A. என்ற எக்ஸ் தள பக்கத்தில் பரவி வரும் காணொளி பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதில் ஏமன் தலைநகரான சனாவில் வெடிப்பு நடந்த மற்றொரு காணொளி என்று கூறப்பட்டிருந்தது. 

அதே போல், News of the Yemeni Revolution என்ற முகநூல் பக்கத்திலும் 2015ஆம் ஆண்டு இதே காணொளி பதிவிடப்பட்டுள்ளது. அதிலும், ஏமன் என்ற hastagகள் இடம்பெற்றிருந்தது. 

இதை ஒரு துப்பாகக் கொண்டு, இந்த காணொளி பற்றிய ஏதேனும் செய்திகள் உள்ளதா என இணையத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது மே 12, 2015 அன்று FRANCE 24 என்ற இணையத்தள பக்கத்தில், ”Saudi-led air strikes hit Yemeni capital hours before ceasefire” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


அதில் வளைகுடா அரபு நாடுகளின் கூட்டணிக்கும், ஈரான் நட்பு நாடான ஹவுதி போராளிகளுக்கும் இடையே ஐந்து நாள் போர் நிறுத்தம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஏமன் தலைநகர் சனாவில் சவூதி தலைமையில் வான்வழித் தாக்குதல் நடைபெற்றதாகவும், ஹவுத்திகளுக்கு விசுவாசமான இராணுவப் பிரிவுகளின் தளத்தின் மீது மூன்று வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png

மேலும் Haaretz. com என்ற யூடியூப் பக்கத்திலும் ”Missile warehouse cause explosions in Sanaa and Saudi led air strikes contineus CCtv Reuters” என்ற தலைப்பில் மே 13, 2015 அன்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. 


இதையடுத்து பாகிஸ்தானின் கிரானா மலைகளில் அணு கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது மே 16, 2025 அன்று THE ECONOMIC TIMES வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில் பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்திலிருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்பதை சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) உறுதிப்படுத்தியது என்று கூறப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் 13 மே 2025 அன்று INDIA TODAY யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானின் கிரானா மலைகளில் தாக்குதல் நடத்தவில்லை என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. 


முடிவு : 

பாகிஸ்தானின் கிரானா மலை பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பரவும் காணொளி தவறானது. பரவி வரும் காணொளி 2015ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனாவில்,  சவூதி தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடைபெற்ற போது எடுக்கப்பட்டதாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க