YouTurn

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்கிக்கொண்டதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்கிக்கொண்டதாக பரப்பப்படும் செய்தி தவறானது.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவத்தை, தற்போது தமிழ்நாட்டில் நடந்திருப்பது போல் பரப்பப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

சென்னை, செங்கல்பட்டு  மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்.


image.png

X Link | Archive Link

விரிவான விளக்கம்

சீருடையுடன் மாணவர்கள் சிலர் பிரம்பால் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மோதிக்கொண்டதாக குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. 


image.png

X Link

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவில் வரும் காட்சியை கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், 2024 செப்டம்பரிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. 


அப்போது இது குறித்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி INIDAN EXPRESS TAMIL இணையதளத்தில் செய்தி வெளியிட்டுயிருந்தது. அந்த செய்தியில் புதுச்சேரி அடுத்த அரியூரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒருவரை ஒருவர் விறகு கட்டை எடுத்து சரமாரியாக தாக்கிக்கொண்டதாக குறிப்பிடப்படுள்ளது. 

image.png


மேலும் இது குறித்து வேறு ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று தேடி பார்க்கையில், கடந்தாண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தந்தி டிவியின் யூடியூப் பக்கத்திலும், ரவுடிகளை போல பள்ளி மாணவர்கள் -கொலை வெறி தாக்குதல்- ஊரே நின்று வேடிக்கை பார்த்த காட்சி என்ற தலைப்பிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 



அதே போல் மாணவர்கள் சண்டைப்போடும் பகுதியில் உள்ள சுவற்றில் புதுச்சேரி என்று எழுதியிருந்ததையும் காணமுடிந்தது. 


முடிவு :


நம் தேடலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டதாக பரப்பப்படும் செய்தி, 2024ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்தது உறுதியானது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.