YouTurn

'தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்' என முதல்வர் ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

'தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்' என முதல்வர் ஸ்டாலின் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது. உண்மையான நியூஸ்கார்டில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்“ என்று குறிப்பிட்டு தான் ‘சன் நியூஸ்’ தனது பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

பரவிய செய்தி

தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன் - முதல்வர் ஸ்டாலின்



X Link | Archive Link

விரிவான விளக்கம்

“தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்” என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய பதாகை கொண்ட நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சன் நியூஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நியூஸ் கார்டில் மதுரையில் எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் நியூஸ்கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான நியூஸ்கார்டு அல்ல என்பதை அறிய முடிந்தது. 


‘DMK IT Wing” ஊடகப் பக்கத்தில் பரவி வரும் நியூஸ்கார்டில் உள்ள அதே புகைப்படத்துடன் “மண் - மொழி - மானம் காக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்" என உறுதிமொழியை முழங்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டு கடந்த செப்டம்பர் 15 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் புகைப்படத்தில், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்“ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 


#ஓரணியில்தமிழ்நாடு எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தி @DMKITwing Tag… pic.twitter.com/GL37KHz94O

— DMK IT WING (@DMKITwing) September 15, 2025


இதே போன்று, ‘சன் நியூஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நியூஸ் கார்டிலும், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்“ என்ற உறுதிமொழியைக் குறிப்பிட்டே பதாகை இடம்பெற்றிருந்தது. 


#அரசியல்Post | ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற வரிகளுடன் மதுரையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.#SunNews | #Madurai pic.twitter.com/Y7PrpX0U6H

— Sun News (@sunnewstamil) September 14, 2025


இந்நிலையில் உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து, “தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாகக் குறிப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முடிவு: 


நம் தேடலில், “தமிழ்நாட்டை திருடாமல் விடமாட்டேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க