YouTurn

கேரளாவில் பெண் வேட்பாளருக்கு பதில் அவரது கணவரின் படத்தை கொண்ட பேனர்! உண்மை என்ன?

கேரளாவில் பெண் வேட்பாளருக்கு பதில் அவரது கணவரின் படத்தை கொண்ட பேனர்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘வெள்ளரி பட்டணம்’ என்ற மலையாள திரைப்படத்தில் வரும் காட்சி இது.

பரவிய செய்தி

கேரளாவில் தான் இந்த போஸ்டர் ஒட்டியிருக்காங்க 

இவருடைய மனைவிக்கு ஓட்டு போடுங்கன்னு இவரு கேக்குறாரு...

வேட்பாளர் போட்டோ போடாமல் அவருடைய கணவர் போட்டோ போட்டு ஓட்டு கேக்குறாங்க அதிகம் படிச்சா மாநிலத்தில்.

எந்த அளவுக்கு மதம் இவர்களை மிருகமாக்கி வைத்துள்ளதுனு பாருங்கள்


image.png


Link / Archive Link


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

இஸ்லாமியர் ஒருவரின் புகைப்படத்தை கொண்டு, சக்கரக்குடம் கிராம பஞ்சாயத்து PPDP கட்சியின் வேட்பாளர் சுலைமானின் மனைவி பாத்திமாவை வெற்றி பெறச் செய்வீர் என்று எழுதப்பட்டிருக்கும் பேனர் ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு, ’படித்தவர்கள் அதிகமிருக்கும் கேரளாவில் முஸ்லிம் பெண் வேட்பாளரின் புகைப்படத்தை போடாமல் அவரது கணவரின் புகைப்படத்தை போட்டு ஓட்டு கேட்கும் அளவிற்கு மத அடிப்படைவாதம் நிலவுகிறது’ என்று இந்துத்துவவாதிகள் உட்பட பலரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடிய போது, ‘Amrita Movies’ என்ற யூட்யூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ‘வெள்ளரி பட்டணம்’ என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு காட்சியைக் காணமுடிந்தது. அந்தக் காட்சியில், முஸ்லிம் பெண் வேட்பாளரின் புகைப்படத்தை போடாமல் அவரது கணவரின் புகைப்படத்தை போட்டு ஓட்டு கேட்பதாக பரப்பப்படும் புகைப்படத்தில் உள்ள பேனரை மரம் ஒன்றில் கட்டி நிறுத்தி வைப்பதைக் காணமுடிகிறது. 



இந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘சக்கரக்குடம் கிராம பஞ்சாயத்து’ என்பதை கேரள அரசின் உள்ளூர் சுயாட்சித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேடினோம். அதில் ‘சக்கரக்குடம்’ என்ற பெயரில் கிராம பஞ்சாயத்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.


image.png


மேலும் ‘வெள்ளரி பட்டணம்’ திரைப்படம் குறித்து தேடியபோது, ‘The Hindu’ செய்தித்தளத்தில் அப்படத்திற்கு எழுதப்பட்டிருந்த விமர்சனக் கட்டுரை ஒன்று காணக்கிடைத்தது. அதில், ’அரசியல் நையாண்டி பாணியில் திரையாக்கம் செய்யப்பட்டிருக்கும் இத்திரைப்டம் ’சக்கரகுடம்’ என்று புனைவாக (fictional) உருவாக்கப்பட்ட ஒரு பஞ்சாயத்தில்  நடப்பதாக காட்சிபடுத்தப்பட்டிருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து பரப்பப்படும் இந்த பேனர் ‘வெள்ளரி பட்டணம்’ என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு புனைவு என்பது உறுதியாகிறது. 


முடிவு:


‘வெள்ளரி பட்டணம்’ என்ற மலையாள திரைப்படத்தில் வரும் புனைவுக் காட்சியை திரித்து, உண்மையிலே கேரளாவில் பெண் வேட்பாளருக்கு பதிலாக அவரது கணவரின் புகைப்படம் பேனரில் அச்சிடப்பட்டுள்ளதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க