YouTurn

உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணியை காப்பாற்றும் வீடியோ! உண்மை என்ன?

உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணியை காப்பாற்றும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ காஷ்மீரின் ’பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலின் போது உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணி ஒருவருக்கு உதவிய போது எடுக்கப்பட்டது தான்.

பரவிய செய்தி

@youturn_in fact check this. This video is from Uttrakhand land slide.


image.png


Link / Archive Link


இந்த வீடியோ உத்தரகாண்டில் எடுக்கப் பட்டது நிலச்சரிவில் காயமடைந்தவரை தூக்கிச் சென்ற நபர்.


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்னும் சுற்றுலாத்தளத்தில் கடந்த 22ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 28 பேர் உயிரிழந்தனர். அதனை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகளால் முஸ்லிம் வெறுப்பு, காஷ்மீர் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த நிலையில், ’தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை காஷ்மீர் இளைஞர் ஒருவர் முதுகில் சுமந்து உயிரைக் காப்பாற்றிய காட்சிகள்’ செய்தியாக வெளிவந்தது. எல்லா காஷ்மீரிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த காட்சி அமைந்தது.


இந்நிலையில், இந்து மக்கள் கட்சியும், பாஜக ஆதரவாளர்களும் ‘இந்த காட்சி தற்போது பஹல்காம் சம்பவத்தின் போது எடுக்கப்பட்டதல்ல, உத்தரகாண்ட் நிலச்சரிவின் போது எடுக்கப்பட்டது’ என்று சமூக வலைத்தளங்களில் பரப்பிவருகிறார்கள். 




உண்மை என்ன?


இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’பயங்கரவாத தாக்குதலால் காயம்பட்டவரை தூக்கிச் செல்லும் உள்ளூர்வாசி’ என்று செய்தியாக இந்த வீடியோவை ’தீக்கதிர்’, ‘புதிய தலைமுறை’ ஆகிய ஊடகங்கள் வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது. 


image.png


அதேபோல், ‘Lokmat Times’ என்ற ஆங்கிய செய்தித்தளம் இந்த வீடியோவை வெளியிட்டு, ‘பஹல்காம் தாக்குதலின் போது சுற்றுலா பயணி ஒருவரை உள்ளூர்வாசி சுமந்து சென்றதாக’ செய்தி வெளியிட்டிருப்பதைக் காணமுடிந்தது. 


image.png


‘ETV Bharat’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் ’சஜாத் அகமது பட்’ என்ற காஷ்மீரி இளைஞர், அவரது வயது 32 என்றும் அவர் துண்டு, போர்வை போன்ற துணிகளை விற்பனை செய்யும் சாலையோர வியாபாரி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த செய்தியிலும், ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது இவர் காயமடைந்த சுற்றுலா பயணியை முதுகில் சுமந்து வந்து உதவியதாக குறிப்பிடுகிறது. 


image.png


’India Today’ பஹல்காம் தாக்குதலின் போது ’சஜாத் அகமது பட்’ சுற்றுலா பயணிகளுக்கு உதவியது குறித்து அவரிடம் நேர்காணல் செய்திருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறது.


image.png


மேற்கூறிய விவரங்களை கொண்டு பார்க்கையில், இந்த வீடியோ ‘பஹல்காம் தாக்குதலின் போது சுற்றுலா பயணி ஒருவரை உள்ளூர்வாசி சுமந்து சென்ற உதவியபோது’ எடுக்கப்பட்டதுதான் என்பது நிரூபணமாகிறது.


முடிவு:


இந்த வீடியோ காஷ்மீரின் ’பஹல்காம்’ பயங்கரவாத தாக்குதலின் போது  சஜாத் அகமது பட் என்ற உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணி ஒருவருக்கு உதவிய போது எடுக்கப்பட்டது தான். இதனை உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த நிலச்சரிவின் போது எடுக்கப்பட்டது என இந்து மக்கள் கட்சி மற்றும் பாஜக ஆதரவாளரும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.

சுருக்கமாக













பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க