YouTurn

அயோத்திக்கு செல்லும் வழியில் இறந்த சாமியார் எனத் தவறாகப் பரவும் பழைய புகைப்படம்!

அயோத்திக்கு செல்லும் வழியில் இறந்த சாமியார் எனத் தவறாகப் பரவும் பழைய புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வாழ்க்கையில் ஆட்டமும், அகங்காரமும், ஆணவமும், வெறுப்பும் இவ்வளவுதான். பெங்களூரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை இந்த இந்தியாவை விட்டு மட்டுமல்ல, நானும், என் BJP அரசும் இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுவோம் என்று மேடையில் சவால் விட்ட சாமியார் & அரசியல்வாதி.. ராமர் கோவிலுக்கு போகும் வழியிலே விபத்தில் இறந்து விட்டார்..



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

அயோத்தி ராமர் கோவில் வருகின்ற ஜனவரி 22 அன்று திறக்கப்படவுள்ள நிலையில், அயோத்தியில் நடைபெறவுள்ள விழாவிற்காக பலரும் படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்காக பல மாநிலங்களில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை இந்தியாவை விட்டு மட்டுமல்ல, இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுவோம் என்று மேடையில் சவால் விட்ட சாமியார் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்தில் இறந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். அப்போது இந்த விபத்தோடு தொடர்புடைய பல்வேறு புகைப்படங்கள் கிடைத்தன. மேலும் தேடியதில், இந்தப் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதையும் அறிய முடிந்தது.



suvanappiriyan என்பவரது blogger பக்கத்தில், பரவி வரும் இதே புகைப்படத்தைக் குறிப்பிட்டு கடந்த 2020 பிப்ரவரி 05 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



அதில், "சவால் விட்டு போகும் வழியிலே விபத்தில் சிக்கி பலியான இந்துத்வவாதி. பெங்களூரில் "முஸ்லீம்களை இந்த இந்தியாவை விட்டு மட்டுமல்ல, நானும் என் BJP அரசும், இந்த உலகத்தை விட்டே அனுப்பி விடுவோம்" என்று மேடையில் சவால் விட்டு போகும் வழியிலே விபத்தில் சிக்கி பலியான இந்துத்வவாதி! இந்துத்வவாதிகளே...! மற்ற உயிரினங்களை இம்சித்து சுகம் காண நினைக்காதீர்கள். அந்த இம்சையில் நீங்களே விழும் போதுதான் அதன் வலி புரியும்." என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.



மேலும் இதே பதிவில், அந்த சாமியார் பேசியுள்ளதாக வீடியோ ஒன்றை இணைத்துள்ளதையும் காண முடிந்தது. அதில் இவர் கன்னடத்தில் பேசுகையில் எந்த இடத்திலும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பேசவில்லை. காவல்துறையினருக்கு எதிராக அவர் பேசியுள்ளதையே காண முடிந்தது.

மேலும் படிக்க: உத்தரகாண்ட் சாமியார் விடுதியில் பெண்களுடன் சிக்கியதாகப் பரவும் இலங்கை புத்த பிக்குவின் வீடியோ !

மேலும் படிக்க: இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தி சாமியார் வேடமிட்டதாகப் பரப்பப்படும் எடிட் புகைப்படம் !

முடிவு:

நம் தேடலில், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு எதிராக பேசிவிட்டு அயோத்திக்கு செல்லும் வழியில் இறந்த சாமியார் எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இந்த செய்தி கடந்த 2020-ல் இருந்தே இணையதளங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க