YouTurn

’இந்துக்கள் அசைவ உணவு உண்பதை மத்திய அரசு தடை செய்யவேண்டும்’ என எச்.ராஜா கூறினாரா? உண்மை என்ன?

’இந்துக்கள் அசைவ உணவு உண்பதை மத்திய அரசு தடை செய்யவேண்டும்’ என எச்.ராஜா கூறினாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டு. எச்.ராஜாவும் அப்படிப் பேசவில்லை, புதிய தலைமுறையும் அப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிடவில்லை.

பரவிய செய்தி

இந்துக்கள் அசைவ உணவு உண்பதால்தான் திருப்பரங்குறத்தில் ஆடு பலியிடுவதை எந்த தாக்கமும் இல்லாமல் கடந்துபோகிறோம். இனி இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்யவேண்டும். - ஹெச். ராஜா கோரிக்கை

X link


விரிவான விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவைவில் கந்தூரி எனப்படும் ஆடு பலியிடும் நிகழ்வை இஸ்லாமியர்கள் நடத்தக்கூடாது என இந்துத்துவா அமைப்புகள் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் திருப்பரங்குன்றம் மலையைக் காப்பதாகக் கூறி இந்து முன்னணி கடந்த 4ம் தேதி போராட்டத்தை நடத்தியது. இதில், பாஜக தலைவர் எச்.ராஜாவும் கலந்து கொண்டார். 

#அமிர்தநீரை மட்டும் குடிப்போம் இப்படிக்கு @HRajaBJP pic.twitter.com/fSXS04iSGF

— Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) February 5, 2025

இந்நிலையில் சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் எச்.ராஜா கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்படுகிறது. அதில், ”இந்துக்கள் அசைவ உணவு உண்பதால்தான் திருப்பரங்குறத்தில் ஆடு பலியிடுவதை எந்த தாக்கமும் இல்லாமல் கடந்துபோகிறோம். இனி இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்யவேண்டும்” என்று அவர் கூறியதாக உள்ளது.

உண்மை என்ன?

பரவக் கூடிய நியூஸ் கார்டு புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் வெளியாகியுள்ளது. அதில், ’04.02.2025 - 8.10 PM’ என்ற தேதியும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ‘8.00, 8.30’ என அரைமணிநேர இடைவெளியில்தான் நியூஸ் கார்டில் நேரத்தை குறிப்பிடுவார்கள். 

எனவே, பரவக் கூடிய நியூஸ் கார்டு குறித்து புதிய தலைமுறை ஊடகத்தின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த செய்தியும் அவர்கள் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. திருப்பரங்குன்றம் குறித்து எச்.ராஜா சமீபத்தில் பேசியவற்றிலும் பரவக் கூடியதில் இருப்பது போன்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மேற்கொண்டு தேடியதில், எச்.ராஜாவின் இதே புகைப்படத்துடன் 2024, டிசம்பர் மாதம் புதிய தலைமுறையில் வேறொரு நியூஸ் கார்டு வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில், “பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் ஹெச்.ராஜா குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராகவும் 2018ல் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்” என்றுதான் உள்ளது. 

இவற்றிலிருந்து எச்.ராஜா குறித்து புதிய தலைமுறை ஊடகத்தில் பெயரில் பரவக் கூடிய நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

முடிவு: 

இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்யவேண்டுமென எச்.ராஜா பேசியதாகப் பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது. எச்.ராஜாவும் அப்படிப் பேசவில்லை, புதிய தலைமுறையும் அப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிடவில்லை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க