யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இந்து நபர் ஒருவர் இஸ்லாமியப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை. குற்ற செயலில் ஈடுபட்டவர் பெயர் முகமது ஆதில். இவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
மூத்திரபிரதேசத்தில் மொராதாபாத் நகரில் இஸ்லாமிய பெண்களை குறி வைத்து .... பயங்கரவாத ஆர் எஸ் எஸ் இந்துத்துவா தீவிரவாத கூட்டத்தின் ஏவல் சொறி நாய்கள்......

விரிவான விளக்கம்
உத்தரபிரதேசத்தில் மொராதாபாத் நகரில் இஸ்லாமிய பெண்ணை இந்துத்துவாவை சேர்ந்த நபர் துன்புறுத்துவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் லென்ஸ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ஆகஸ்ட் 5, 2025 அன்று Time Of India ஊடகத்தில், “UP shocker: Man gropes burqa-clad woman in Moradabad, opens fire at police in bid to flee; shot in leg” என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது.

அதில் மொராதாபாத்தில் பர்தா அணிந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய, 28 வயதான நபர் முகமது அதில் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் என்றும், என்கவுண்டரின் போது குற்றவாளியின் இடது காலில் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, மொராதாபாத் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 5, 2025 அன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர், நாக்ஃபானி காவல் நிலையக் குழுவினரால் ஒரு என்கவுண்டரில் கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
महिला के साथ छेड़छाड़/अश्लील हरकते करने तथा पुलिस टीम पर अवैध तमंचे से जानलेवा हमला करने के शातिर आरोपी को थाना नागफनी पुलिस ने मुठभेड़ में किया गिरफ्तार, उक्त संबंध में पुलिस अधीक्षक नगर @moradabadpolice की बाईट। pic.twitter.com/z3ppWSvhHE
முடிவு:
நம் தேடலில், உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இந்து நபர் ஒருவர் இஸ்லாமியப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகப் பரவும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. குற்ற செயலில் ஈடுபட்டவர் பெயர் முகமது ஆதில். இவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்.