யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
மோடி ஒரு பித்தலாட்டக்காரர்! இதோ பாருங்கள், பழைய கோவிட் சான்றிதழில், மோடியின் புகைப்படம் இருக்கும்! என்னமோ கோவிட் ஷீல்ட் தடுப்பூசியை அவரே தயாரித்த மாதிரி! இப்போது பாருங்கள்! கோவிட் ஷீல்டின் இப்போதைய சான்றிதழில் மோடியின் படம் இல்லை!ஏனென்றால் அந்த தடுப்பூசி தரமில்லாதது!

X Link:

X Link:
விரிவான விளக்கம்
சில தினங்களுக்கு முன்பு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா (AstraZeneca) நிறுவனம் ஒப்புகொண்டது. இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு பின்பு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களின் புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதைக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, கோவிட் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வதற்கான ஒன்றிய அரசின் பிரத்யேக தளமான Co-Win தளத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி புதிதாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இல்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் இதற்கான காரணம் குறித்து தேடுகையில், இந்தியாவில் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையடுத்து, மாதிரி நடத்தை விதிகள் (Model Code of Conduct) காரணமாக, பிரதமர் மோடியின் படம் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

இதற்கு முன்னரும் மாநிலத் தேர்தல்களின் போது இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: பிரதமர் மோடியின் பல்லடம் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டதாகப் பரவும் பழைய வீடியோக்கள் !
மேலும் படிக்க: பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் அணிந்து ஸ்நோர்கெலிங் செய்வதாகப் பரவும் தவறான செய்திகள் !
முடிவு:
நம் தேடலில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புகொண்டவுடன், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது எனக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
Those who want the vaccine certificate without G’s picture please download it now, this is the right time!
Modi’s pic removed after recent revelations by Asterzeneca?? pic.twitter.com/1gUl97rMAx
— Vijay Thottathil (@vijaythottathil) May 1, 2024
கோவிட் தடுப்பூசி சான்றிதழில் மோடி ஜியை இனி காண முடியாது
சரிபார்க்க பதிவிறக்கம் செய்யப்பட்டது - ஆம், அவரது படம் போய்விட்டது
— MK (@MaheenSylvan) May 2, 2024