யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை அரசு செலவழித்துள்ளதாக அதிமுகவினர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
தெரு நாய்களிடமும் ஊழல் செய்த திமுக!! சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்தது அம்பலம்!!! அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய திமுகவின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்கள் வரை தொன்று தொட்டு தொடர்கிறது!!
விரிவான விளக்கம்
சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்த அரசு என்று கூறி அதிமுகவினர் சார்பில் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
தெரு நாய்களிடமும் ஊழல் செய்த திமுக!!
சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்தது அம்பலம்!!!
அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய திமுகவின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு… pic.twitter.com/jF44zcx5S7
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த 2023-ல் மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று 2024 ஆம் ஆண்டு 20,296 நாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 14,678 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய முடிந்தது.
மாநகராட்சியில் உள்ள 5 இன கட்டுப்பாட்டு மையங்களில் கடந்த 2024ம் ஆண்டு 20296 நாய்கள் பிடிக்கப்பட்டு அதில் 14678 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. புதிய மூன்று மேம்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் இனி வருடத்தில் 42000 கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும்.
#ChennaiCorporation pic.twitter.com/gbImjtp2hX
மேலும் தெருநாய் கருத்தடை திட்டத்திற்கு 20 கோடியை அரசு ஒதுக்கியது குறித்து ஆய்வு செய்ததில், கால்நடை மருத்துவர்கள் நியமனம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை 20 கோடி ரூபாய் செலவில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளதை தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது. இது தவிர சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை அரசு செலவழித்துள்ளது குறித்து எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

மேலும் 100 கால்நடை மருத்துவமனைகளில், தெருநாய் கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவ வசதிகளை ரூ.20 கோடி செலவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது குறித்து “New Indian Express” ஊடகத்திலும் மார்ச் 15, 2025 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி, 2025 பிப்ரவரியில், சென்னை மாநகராட்சியால் இயக்கப்படும் தெருநாய் கருத்தடை மையங்கள், நவீன தெருநாய் மருத்துவமனைகளாக மற்றும் கண்காணிப்பு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்பதை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி மூலம் அறிய முடிந்தது.
#Chennaiites 👋
பெருநகர் சென்னை மாநகராட்சியால் இயக்கப்படும் தெருநாய் கருத்தடை மையங்கள், தற்போது நவீன தெருநாய் மருத்துவமனைகளாக மற்றும் கண்காணிப்பு மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.#ChennaiCorporation #HeretoServe pic.twitter.com/Yl17Qq7op6
இத்தகைய தெருநாய் கருத்தடை மையங்கள் மூலமாக தினமும் 30 தெரு நாய்களுக்கு கருத்தடை இனவிருத்தி தடுக்க மாநகராட்சி முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 5 தெருநாய் கருத்தடை மையங்கள் செயல்படும் நிலையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்களை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இது தவிர கடந்த மே மாதத்தில், தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, 200 கால்நடை மருத்துவர்கள் அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை தினமலர் வெளியிட்டுள்ள செய்தி மூலம் அறிய முடிகிறது.
மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், “பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 67,806 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதில் ஜூன் 2025 இல் மட்டும் 139 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,11,371 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்யடுள்ளது. இதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 3 கோடியே 51 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது" என்று பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையின் கால்நடை மருத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது“ என்றும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.
139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய 20 கோடி ரூபாய் ஒதுக்கியதாகப் பரவும் வதந்தி ! @CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/ceqd0gTw3g pic.twitter.com/AWEBWNPG8W
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை அரசு செலவழித்துள்ளதாக அதிமுகவினர் உட்பட பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை அரசு செலவழித்துள்ளதாக பரவும் செய்திகள் ஆதாரப்பூர்வமற்றவை என்பதை அறிய முடிகிறது.