யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
எஸ்ஐஆர் (Special Intensive Revision - SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தமிழ்நாடு உட்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன.
பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்ஐஆர் பல சர்ச்சைகளுக்குள்ளானது. இந்நிலையில் பல மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், "தமிழ்நாட்டில் ஆளும் திமுக பல்வேறு கட்சிகளுடன் இணைந்து எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் மட்டுமே நிறைவேற்றியுள்ளன. கேரளா அரசு எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த வழக்கும் தொடரவில்லை" என்று கூறுவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்படவில்லை எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிந்தது.
“Bar and Bench” ஊடகத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் மீண்டும் சரிபார்க்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகிறது.
இதே போன்று, “The Hindu” ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிராக, தமிழ்நாடு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திங்கள்கிழமை (நவம்பர் 3, 2025) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த செயல்முறை "அரசியலமைப்பு மீறல்" என்றும், இது ஒரு மறைக்கப்பட்ட, நடைமுறை தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றும் அவர் கூறினார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.