யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உண்மையான புகைப்படத்தில், புவனகிரி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் துரை சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள சுவர் விளமபரத்தில் “திருமா” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சட்டமன்ற தேர்தல் புவனகிரி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் துரை சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தில், “தேருமா” என்று எழுதப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் இந்த விளம்பரத்தை, விசிக தலைவர் திருமாவளவனின் பெயர் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் கிண்டலாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இதே புகைப்படத்தைக் குறிப்பிட்டு, திருமாவளவன் மதமாற்றம் செய்ய சொல்வதாகவும் கூறி வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
மோசடி மத மாற்றம்
திருமா உடந்தை pic.twitter.com/ocllhsFWm3
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘வளையமாதேவி சதிஷ்” என்பவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான புகைப்படத்தில், புவனகிரி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் துரை சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள சுவர் விளமபரத்தில் “திருமா” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எடிட் செய்து போலியான புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இதே போன்று அர்ஜுன் சம்பத் பதிவு செய்துள்ள வீடியோ குறித்தும் ஆய்வு செய்தோம். வீடியோவில், "மதமாற்றம் ஒன்றே தலித் விடுதலைக்கு ஒரே வழி" என்று அண்ணல் அம்பேத்கர் கூறியது குறித்து ஒரு இளம்பெண் விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு, "மாற்றுக்கருத்தே சொல்ல முடியாது. கொள்கை ஆசானின் நிலைப்பாடு இது. இதை நான் நேரடியாக சொன்னால், திருமாவளவன் மதமாற சொல்கிறார் என சனாதனவாதிகள் சொல்வார்கள். இதெல்லாம் நீங்க ரகசியமாக செய்ய வேண்டிய வேலை" என்று பதிலளித்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
முடிவு:
நம் தேடலில், விசிக தலைவர் திருமாவளவனின் பெயர் சுவர் விளம்பரம் ஒன்றில் “தேருமா” என்று எழுதப்பட்டுள்ளது எனப் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.