YouTurn

ஹமாஸ் அமைப்பினர் பாராகிளைடரில் இஸ்ரேலுக்குள் நுழையும் போது மின்கம்பியில் சிக்கியதாகப் பரவும் தென்கொரியா வீடியோ!

ஹமாஸ் அமைப்பினர் பாராகிளைடரில் இஸ்ரேலுக்குள் நுழையும் போது மின்கம்பியில் சிக்கியதாகப் பரவும் தென்கொரியா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹமாஸ் பயங்கரவாதி பாராகிளைடரில் இஸ்ரேல் உள்ளே நுழையும் போது உயர் மின் அழுத்த கம்பியில் மோதி மரணம்



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

பாலஸ்தீன் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிலவி வருவதால், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர் பாராகிளைடரின் மூலம் இஸ்ரேலுக்கு நுழையும் போது உயர் அழுத்த மின்கம்பியில் மோதி இறந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் பாராகிளைடரில் பயணிக்கும் பயணி ஒருவர் மின்கம்பியில் மோதி வெடித்து சிதறுவதையும் காண முடிகிறது.



Archive Link:



Archive Link:

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இந்த வீடியோ கடந்த ஜூன் மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காண முடிந்தது. ஆனால் அந்த பதிவு சீனமொழியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், எங்கு நடந்தது என்பதற்கான விபரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.



Archive Link:

இது குறித்து மேலும் தேடியதில், Naewoeilbo என்ற கொரிய இணையதளத்தில் இந்த செய்தி குறித்து ஜூன் 17, 2023 அன்று கட்டுரை வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், "தென் கொரியா நாட்டில் உள்ள சியோப்ஜிகோஜி (Seopjikoji Beach) கடற்கரைக்கு வந்த 60 வயது சுற்றுலாப்பயணி ஒருவர் உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



மேலும் இதே வீடியோ காட்சி, Yonhap News TV (연합뉴스TV) என்ற கொரிய யூடியூப் பக்கத்திலும் "ஜெஜூவில் பாராகிளைடிங் செய்யும் போது உயர் மின்னழுத்த வயரில் சிக்கி 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்" என்ற தலைப்பில் ஜூன் 17, 2023 அன்று வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.



மேலும் படிக்க: இஸ்ரேல் பிரதமர் தனது மகனை போர்முனைக்கு அனுப்பியதாகப் பரவும் பழைய புகைப்படம் !

மேலும் படிக்க: இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் குழந்தையை கொல்வது போல் போலியான வீடியோ எடுப்பதாகப் பரவும் பழைய குறும்பட வீடியோ !

முடிவு:

நம் தேடலில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர் பாராகிளைடரின் மூலம் இஸ்ரேலுக்கு நுழையும் போது உயர் அழுத்த மின்கம்பியில் மோதி இறந்ததாகக் கூறி பரவி வரும் வீடியோ தவறானது. இது தென்கொரியா நாட்டில் சுற்றுலா பயணி ஒருவர் மின்கம்பியில் மோதிய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க