YouTurn

இந்தியாவில் விற்கப்படும் ஆசிர்வாத் ஆட்டாவில் ஹலால் முத்திரை எனப் பரவும் பொய் !

இந்தியாவில் விற்கப்படும் ஆசிர்வாத் ஆட்டாவில் ஹலால் முத்திரை எனப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஆசிர்வாத் ஆட்டா கலால் முத்திரை போட்டு இருக்கு. இன்று முதல் எச்சில் துப்பிய இந்த மைதா மாவை வாங்குவதை நிறுத்திவிடுகிறேன்.. ஆசிர்வாத் ஆட்டாவை ஹிந்துக்கள் புறக்கணிப்போம். இந்துக்களே தயவு செய்து "ஹலால் பொருட்களை" புறக்கணியுங்கள்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

சிர்வாத் ஆட்டாவில் பிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஏற்கனவே பொய் செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இந்தியாவில் விற்கப்படும் ஆசிர்வாத் ஆட்டாவின் பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்றை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் பரவி வரும் பதிவுகளில், இவ்வாறு எச்சில் துப்பப்பட்ட ஆசிர்வாத் ஆட்டாவை இந்துக்கள் அனைவரும் புறக்கணிப்போம் என்று குறிப்பிட்டிருப்பதையும் காண முடிந்தது.





உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது கடந்த 2020-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.



X post link

அப்பதிவுகளுக்கு விளக்கம் அளித்துள்ள ITC நிறுவனம், இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டு அதில் விளக்கம் அளித்திருந்தது.

மேலும் "இத்தயாரிப்புகள் பழையது. இப்போது தயாரிக்கப்பட்டவை அல்ல. மேலும் ஒரு தயாரிப்பு எந்த நாட்டில் விற்கப்படுகிறதோ, அந்த நாட்டின் தேவைக்கேற்பவே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். எனவே மற்ற பிராண்டட் உணவு பொருட்களைப் போலவே இதுவும் அனுப்பப்பட்டது" என்றும் மற்றொரு பதிவில் ITC நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.



ITC நிறுவனத்தின் இத்தகையப் பதிலை, ஆசிர்வாத் ஆட்டாவின் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள "ஏற்றுமதிக்கு" (For Expert) என்ற வார்த்தையின் மூலமும் உறுதிப்படுத்த முடிகிறது.



இதற்கு முன்பும் ஆசிர்வாத் ஆட்டாவில் பிளாஸ்டிக் கலக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ஆசிர்வாத் கோதுமை மாவில் பிளாஸ்டிக் கலக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி !

முடிவு :

நம் தேடலில், ஆசிர்வாத் ஆட்டா பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் புகைப்படம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்பப்பட்ட ஆசிர்வாத் தயாரிப்பின் பழைய புகைப்படம் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க