YouTurn

ஆங்கிலம் எழுதத் தெரியாத ஆசிரியை எனப் பரவும் வீடியோ பீகாரைச் சேர்ந்தது!

ஆங்கிலம் எழுதத் தெரியாத ஆசிரியை எனப் பரவும் வீடியோ பீகாரைச் சேர்ந்தது!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

குஜராத் மாடல் டீச்சருக்கு ஆங்கிலத்துல English னு எழுதத்தெரியாதாம். அப்படின்னா நீட் தேர்வுகளில் வெற்றி மட்டும் எப்படி சாத்தியமாகிறது. வெளங்கிரும்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

குஜராத்தில் ஆசிரியை ஒருவர் ஆங்கில வார்த்தைகளையும் ஹிந்தியில் எழுதுவதைப் பாருங்கள். ஆங்கிலத்தில் எழுதத் தெரியாதாம். இவர்கள் நீட் தேர்வுகளில் மட்டும் எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறி 1:29 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் ஹிந்தி மொழியில் உள்ள அந்த வீடியோவை மொழிப்பெயர்த்து பார்த்ததில், நிரூபர் ஒருவர் ஆசிரியை ஒருவரிடம் ஆங்கில மாதங்களை கரும்பலகையில் எழுதுமாறு சொல்வதையும், அதற்கு ஆசிரியை ஜனவரி, பிப்ரவரி என்று ஹிந்தியில் எழுதிவிட்டு, தன்னால் ஆங்கிலம் கற்பிக்க முடியாது என்று அந்த ஆசிரியை சொல்வதையும் அந்த வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த ஜனவரியிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது.



Mock Live News என்ற யூடியூப் பக்கத்தில், கடந்த 2022 மே 28 அன்று பரவி வரும் வீடியோவின் முழு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில், வீடியோவின் ஆரம்பத்திலேயே கையில் மைக்குடன் இருக்கும் நிரூபர் ஒருவர் "பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள 'தங்குப்பா பள்ளியில்' தற்போதய கல்வி சூழலின் நிலைமையைத் தான் இங்கு காண போகிறோம்" என்று பேசுவதையும், பின்னர் ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவர்களிடமும், ஆசிரியரிடமும் கேள்வி கேட்பதையும் அதில் காண முடிகிறது.

இதன் மூலம் பீகாரின் கயா மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில்  நடந்த சம்பத்தை, குஜராத்தில் நடந்தது என்று கூறி பலரும் தவறாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழ்நாடு, குஜராத் மாடல் சாலை எனப் பரப்பப்படும் பல்கேரியா மாடல் சாலை !

முடிவு:

நம் தேடலில், ஆங்கிலம் எழுதத் தெரியாத குஜராத் ஆசிரியை என்று பரவும் வீடியோ பீகாரில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க