YouTurn

தமிழ்நாடு ஆளுநர் அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றதாக சவுக்கு சங்கர் பரப்பும் பொய் !

தமிழ்நாடு ஆளுநர் அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றதாக சவுக்கு சங்கர் பரப்பும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஆளுனர் அளித்த விருந்து சிறப்பா இருக்கா சார்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் போது ஆளுநர் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்விற்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அளித்த பொங்கல் விழா நிகழ்ச்சியை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் அளித்த விருந்தில் திமுக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் பெரிய கருப்பன் கலந்து கொண்டதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை சவுக்கு சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, " ஆளுனர் அளித்த விருந்து சிறப்பா இருக்கா சார் " என அமைச்சர் பொன்முடியை டக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார். இப்படத்தை அதிமுக, பாஜக கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.





உண்மை என்ன ? 

சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் தரப்பில் விருந்து அளிக்கப்பட்டதாகவும், அதில் அமைச்சர்கள் கலந்து கொண்டதாகவும் எந்த செய்திகளும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.



Twitter link 

ஆகையால், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஏதும் சமீபத்தில் நிகழ்ந்ததா எனத் தேடுகையில்" காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் வரும் 22ம் தேதி பட்டமளிப்பு விழா; ஆளுநர் ரவி, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பு. கொரோனா, துணைவேந்தர் நியமன தாமதம், ஆளுநர் தேதி தராதது என கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடக்கவில்லை " என ஜனவரி 19ம் தேதி சன் நியூஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.



Twitter link | Archive link 

ஜனவரி 22ம் தேதி அமைச்சர் பெரிய கருப்பன் ட்விட்டரில் பக்கத்தில், " அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஒன்றிய கல்வி, திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களுடன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினோம் " என நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உடன் பதிவாகி இருக்கிறது.



Twitter link



Twitter link | Archive link 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவாகி உள்ளன.



ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்ட புகைப்படங்களில் ஆளுநர் ஆர்.என் ரவி அணிந்திருந்த உடையும், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் உணவு அருந்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் ஆளுநரின் உடையும் ஒன்றாக உள்ளது. ஆக, அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் ஒன்றாக உணவருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆளுநர் அளித்த விருந்து எனத் தவறாக பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த விருந்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் பெரிய கருப்பன் கலந்து கொண்டதாகப் பரவும் தகவல் தவறானது. அந்த புகைப்படம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள், ஆளுநர் ஒன்றாக உணவருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க