யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
பரவிய செய்தி
Just asking out of curiosity, @DMKITwing @U2Brutus_off @Saattaidurai @idumbaikarthi, you guys are saying @TVKVijayHQ is shaking hands with BJP?
But how did @tnpoliceoffl grant permission for @NainarBJP to hold a public gathering right in the heart of Chennai, at Mint Clock Tower?
Even @EPSTamilNadu is finding it difficult to get approval for a public event, yet @arivalayam government seems to be unusually friendly with the BJP. I believe there is still no clear SOP for political gatherings.
No restrictions, no hurdles, unlike what’s imposed on TVK. Don't say this is not a public place

விரிவான விளக்கம்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கியுள்ள பிரச்சாரப் பயணத்திற்கு மட்டும் சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே அரசு அனுமதி வழங்கி உள்ளது என்றும், தவெக தலைவர் விஜய்க்கு மட்டும் அவ்வளவு கட்டுப்பாடுகள் என்றும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Just asking out of curiosity, @DMKITwing @U2Brutus_off @Saattaidurai @idumbaikarthi, you guys are saying @TVKVijayHQ is shaking hands with BJP?
But how did @tnpoliceoffl grant permission for @NainarBJP to hold a public gathering right in the heart of Chennai, at Mint Clock… pic.twitter.com/3Jzik9jduW
உண்மை என்ன?
சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே வேறு கட்சியினர் நிகழ்ச்சி ஏதேனும் நடந்துள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது வடபழனி கார்த்திக் என்ற பேஸ்புக் பக்கத்தில், ஆகஸ்ட் 26, 2025 அன்று வெளியான பதிவு ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை தங்கசாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பாமக தொண்டர்கள் பலரும், மலர் தூவி அவரை வரவேற்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
அதே போல் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரித்து, சிபிஎம் வடக்கு சென்னை மாவட்ட குழுவால் ஒற்றுமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று கூறி Communist Party of India (Marxist)-ன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அக்டோபர் 12, 2023 அன்று பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள பேனரில், வள்ளலார் நகர்,பேருந்துநிலையம் எதிரில் (மின்ட்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
எனவே, சென்னை தங்கசாலையில் உள்ள மிண்ட் மணிக்கூண்டு அருகே இதற்கு முன்பே, பாமக தலைவர் அன்புமணி பங்கெடுத்த நிகழ்ச்சி மற்றும் சிபிஎம் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் அனுமதி வழங்கி உள்ளது போன்று சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.