யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கான பயணக் கட்டணம் சாதாரண பேருந்தில் 75 ரூபாய் என்பதும் குளிர்சாதனப் பேருந்தில் 100 ரூபாய். சமீபத்தில் பயணக் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை.
பரவிய செய்தி
5000 ரூபாய் வாங்கிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..! அரசுப் பேருந்தில் மதுரை to ஸ்ரீவில்லிபுத்தூர் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள். விலைவாசி உயர்வை கண்டு மக்கள் மகிழ்ச்சி.
அப்படி தானே @GunasekaranMu !?
#DMKFailsTN #DMKDestroyedTN
#ADMK_TNJ

விரிவான விளக்கம்
திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்ததற்கான டிக்கெட்டின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘திடீரென்று ஒரேநாளில் அந்த வழித்தடத்திற்கான அரசு பேருந்தின் பயணக் கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்துவிட்டதாக’ அதிமுக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.
5000 ரூபாய் வாங்கிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
அரசுப் பேருந்தில் மதுரை to ஸ்ரீவில்லிபுத்தூர் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள்.
விலைவாசி உயர்வை கண்டு மக்கள் மகிழ்ச்சி.
அப்படி தானே @GunasekaranMu !?#DMKFailsTN #DMKDestroyedTN #ADMK_TNJ pic.twitter.com/9WvJFfLS6Q
உண்மை என்ன?
பரப்பப்படும் பயணச்சீட்டிலே அந்த பேருந்து இராஜபாளையத்தில் இருந்து திருச்சி வழித்தடத்தில் (தடம் எண் 940A) இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்து என்பது தெரிய வருகிறது. திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரை வரை அந்த குளிர்சாதனப் பேருந்தின் கட்டணம் ரூ.100 என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அரசு போக்குவரத்துக் கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A வழியில் இயக்கப்படும் குளிர்சாதனப் பேருந்தில் ‘G.O Ms 48 நாள் 28.01.2018’ படி பயணக் கட்டணமாக 100 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுவதாக’ மதுரை போக்குவரத்துக் கழக (விருதுநகர் மண்டலம்) உதவி மேலாளர் விளக்கமளித்துள்ளதை ‘தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) வெளியிட்டுள்ளது.

திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் சாதாரண அரசு பேருந்தில் 75 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மதுரை போக்குவரத்துக் கழக (விருதுநகர் மண்டலம்) உதவி மேலாளர் விளக்கமளித்துள்ளார்.
இதிலிருந்து, திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கான பயணக் கட்டணம் சாதாரண பேருந்தில் 75 ரூபாய் என்பதும் குளிர்சாதனப் பேருந்தில் 100 ரூபாய் என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
குளிர்சாதனப் பேருந்தின் பயணச்சீட்டை பகிர்ந்து, திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் சாதாரண அரசு பேருந்தின் பயணக் கட்டணம் கூட 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்துவிட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.