YouTurn

வாட்சப்பில் ‘Good Morning’ செய்தி அனுப்பினால் 18% GST விதிக்கப்படவுள்ளதாகப் பரவும் வதந்தி!

வாட்சப்பில் ‘Good Morning’ செய்தி அனுப்பினால் 18% GST விதிக்கப்படவுள்ளதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஏப்ரல் 1ம் தேதி முதல் ’Good Morning’ செய்தி அனுப்பினால் 18% GST விதிக்கப்படும். -  ஒன்றிய அரசு அறிவிப்பு

விரிவான விளக்கம்

செல்போனில் ’Good Morning’ செய்தி அனுப்பினால் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்களிடம் 18% GST வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாக இரு ஆடியோ வாட்ஸ் அப்பில் பரப்பப்படுகிறது.

[audio ogg="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/03/WhatsApp-Audio-2024-03-25-at-3.10.00-PM.ogg"][/audio]

அதில், ”வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ’Good Morning’ செய்தி அனுப்பினால் அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு 18% GST விதிக்கப்படும். ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த Good Morning செய்தி அனுப்புவதினால் முக்கிய வேலைகள் எல்லாம் தடைப்படுகிறது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தயவு செய்து 18% GST-யை மிச்சம் பிடித்துக் கொள்ளுங்கள். செய்தி இந்தியில் வந்துள்ளதால் ஆடியோ வடிவில் சொல்கிறேன்” எனக் கூறப்படுகிறது.

உண்மை என்ன?

இந்த 18% GST குறித்து அரசு தரப்பில் ஏதேனும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதா எனத் தேடியதில், அப்படி எதுவும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது. 

மேற்கொண்டு இந்த செய்தி இந்தியில் வெளியாகியுள்ளது என ஆடியோவில் கூறியிருப்பதால், இது குறித்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இதே தகவல் 2018ம் ஆண்டும் ஒரு நாளிதழில் வந்த செய்தி எனப் புகைப்படம் பரவியுள்ளது.



இந்த புகைப்படம் பரவியதைத் தொடர்ந்து 2018, மார்ச் 20ம் தேதி ’ABP LIVE’ ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பரவக் கூடிய இந்த தகவல் 2018, மார்ச் 2ம் தேதி ’நவ்பாரத் டைம்ஸ்’ எனும் நாளிதழில் வெளியானது என்றும் அந்த செய்திக்குக் கீழே 'கவலைப்பட வேண்டாம், இது ஹோலி' என இந்தியில் குறிப்பிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது ஹோலி பண்டிகையின் போது நையாண்டியாக வெளியிடப்பட்ட ஒரு செய்தி என அச்செய்தி வெளியான பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.  



மேலும் ABP LIVE-ல் உள்ள இதே தகவலை ‘Bhaska’ இணையதளத்திலும் காண முடிகிறது. நவ்பாரத் டைம்ஸ் நையாண்டி என குறிப்பிட்டு  வெளியிட்ட செய்தியை உண்மை எனப் பரப்பியுள்ளனர். அதே தவறான தகவல் தமிழிலும் தற்போது பரவுகிறது. 

முடிவு : 

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ’Good Morning’ செய்தி அனுப்பினால் 18% GST விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது 2018ல் நையாண்டியாக வெளியிடப்பட்ட செய்தி. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க