YouTurn

செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘Curiosity Mars rover' என்ற விண் ஆய்வுக் களம் எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சிறிய பகுதியை விநாயகர் சிலை போன்று Edit செய்துள்ளனர்.

பரவிய செய்தி

'செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.



Facebook Link

விரிவான விளக்கம்

பாலைவன மணற்பரப்பு போன்ற இடத்தில் ஒரு சிறிய பாறை காணப்படுகிறது. அதனை zoom செய்து பார்த்தால் அதில் இந்துக் கடவுளான விநாயகரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி அடங்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, 'செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை இருப்பது செயற்கை கோள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது' பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?

 

முதலில், செவ்வாய் கிரகத்தில் (Mars) விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். ஆனால் இது குறித்து எந்த பிரபலமான ஊடகங்களிலும் செய்தி வெளியாகவில்லை என்பதை பார்க்கிறோம்.

 

அடுத்ததாக, பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், 'Tavi Technical Space' என்ற‌ யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 2023 ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பரப்பப்படும் காட்சி இருப்பதை காண்கிறோம். இதில் 'அந்த பாறையை விநாயகர் சிலை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை காண்கிறோம்.


 

ஆனால், இந்த வீடியோவின் குறிப்பில் இந்த வீடியோ NASA-வின்  'Mars Rover Curiosity' என்ற விண் ஆய்வு களத்தால் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு 'Mars Rover Curiosity' குறித்து இணையத்தில் தேடினோம். NASA விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 'Jet Propulsion Laboratory' என்ற தளத்தில் "Curiosity Views a Crater at 'Jau'" என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.


 

அதில், 'Curiosity Mars rover' என்ற தானியங்கி விண் ஆய்வுக் களம், செவ்வாய் கிரகத்தில் உள்ள 'Jau' என்ற இடத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. இந்த புகைப்படம் சுமார் 129 புகைப்படங்களின் கூட்டுக் கலவை ஆகும்' என்று குறிப்பிடப்படுள்ளது.

 

இந்த புகைப்படத்தை zoom செய்து ஆய்வு செய்ததில் பரப்பப்படும் காட்சி இதில் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் அதில் விநாயகர் சிலை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.


 

இதிலிருந்து, 'Curiosity Mars rover' என்ற விண் ஆய்வுக் களம் எடுத்த புகைப்படத்தை வீடியோவாக மாற்றி, அதில் இருக்கும் பாறையை விநாயகர் சிலை போன்று Edit செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

 

முடிவு:

 

Curiosity Mars rover' என்ற விண் ஆய்வுக் களம் எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சிறிய பகுதியை Edit செய்து  செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை இருப்பதாக தவறாக பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க