யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Gaming Video-வை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாமில் ரபேல் விமானம் தாக்குதல் நடத்திய காட்சி என்று தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
இந்தியாவின் விமானம் ரபேல் பாகிஸ்தான் நாட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும்போது பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலும் நடைபெறுகிறது அதிலிருந்து இந்திய விமானப்படை தப்பிப்பதை மிக துல்லியமாக காண முடிகிறது.

விரிவான விளக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் மோதலுக்கு பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவின் விமானமான ரபேல் பாகிஸ்தான் நாட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும் போது, பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதிலிருந்து இந்திய விமானப்படை தப்பிப்பதை மிகத் துல்லியமாகக் காண முடிவதாகவும் ஒரு காணொளி பரவி வருகிறது. அதில் வானில் பறக்கும் ஒரு போர் விமானத்தை, கீழே இருந்த பீரங்கி மூலம் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இந்தியாவின் விமானம் ரபேல் பாகிஸ்தான் நாட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும்போது பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலும் நடைபெறுகிறது அதிலிருந்து இந்திய விமானப்படை தப்பிப்பதை மிக துல்லியமாக காண முடிகிறது. pic.twitter.com/5uhSZB4cln
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியில் loveleshkumar என்ற water mark-ஐ காணமுடிந்தது. அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடிய போது, அதில் பரவி வரும் காணொளி மே 8 ஆம் தேதி, Ho saaf pakistan என்ற caption உடன் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பான பல்வேறு காணொளிகளும் அதில் இடம்பெற்றிருந்தது.
பரவி வரும் காணொளியில் உள்ள வீடுகள், மரங்கள் அனைத்தும் கிராபிக்ஸ் செய்யப்பட்டது போல் இருந்தது. இதையடுத்து சந்தேகம் எழுந்ததால், காணொளி குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம்.
அப்போது Battle Dragon என்ற யூடியூப் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த பக்கத்தின் description-ல், இது Military Simulation Specialty Channel என்றும், ArmA3 game எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பரவி வரும் காணொளி அதில் இடம்பெற்றுள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது 30 டிசம்பர் 2024 அன்று Russian 5th Generation Fighter Su-57 - Military Simulation ArmA 3 என்ற தலைப்பில் இந்த காணொளி பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. மேலும் இதே போல் பல்வேறு கேமிங் காணொளிகளும் அதில் இடம்பெற்றிருந்தது.

முடிவு :
நம் தேடலில், ‘Battle Dragon’ என்ற யூடியூப் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட Gaming Video-வை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாமில் ரபேல் விமானம் தாக்குதல் நடத்திய காட்சி என்று தவறாக பரப்பப்படுகிறது.