YouTurn

இறந்த இல. கணேசன் அவரது அண்ணியை, மனைவி என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட கலாட்டா!

இறந்த இல. கணேசன் அவரது அண்ணியை, மனைவி என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட கலாட்டா!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாகாலாந்து மாநில கவர்னரும், தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவருமான இல.கணேசன் உடல்நிலை சரியில்லாமல் காலமான நிலையில், அவரது அண்ணியை மனைவி என்று குறிப்பிட்டு கலாட்டா ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.

பரவிய செய்தி

கணவனுக்காக கதறி அழும் மனைவி



Facebook Link

விரிவான விளக்கம்

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் (80) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று (ஆக. 15) காலமானார். பாஜகவில் இணைந்து செயலாற்றி, செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த இல. கணேசனுக்கு பாஜக தேசிய செயலர், தேசிய துணைத் தலைவர், பாஜக மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை தேசிய பாஜக வழங்கியது.


பின்னர் 2021-ல் மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்ட இல. கணேசன், 2022 ஜூலை முதல் நவம்பர் வரை மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்தார். அதன் பின்னர், 2023-ல் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, அம்மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டுவந்தார்.


இந்நிலையில் கணவனுக்காக கதறி அழும் மனைவி என்று குறிப்பிட்டு, இல. கணேசன் உடலுக்கு முன்பு ஒரு வயதான பெண் இருப்பது போன்ற புகைப்படத்தைக் குறிப்பிட்டு கலாட்டா ஊடகம செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இறந்த இல. கணேசன் அவரது உடலுக்கு முன்பு அழுத வயதான பெண், அவரது அண்ணி என்பதை புதியதலைமுறை வெளியிட்டிருந்த செய்தியின் மூலம் அறிய முடிந்தது. 



மேலும் அவரது மனைவி குறித்து ஆய்வு செய்ததில், அவர் தனது வாழ்நாளில் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதை, அவர் வழங்கிய பேட்டி ஒன்றின் மூலம் அறிய முடிந்தது. 



இதே போன்று, “திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்விற்கு தனது வாழ்வை அர்ப்பணித்த இல. கணேசன்” என்று குறிப்பிட்டு நியூஸ்18 தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது. 



இந்நிலையில், நாகாலாந்து மாநில கவர்னரும், தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவருமான இல.கணேசன் உடல்நிலை சரியில்லாமல் காலமான நிலையில், அவரது அண்ணியை மனைவி என்று குறிப்பிட்டு கலாட்டா ஊடகம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.


முடிவு: 


நம் தேடலில், கணவனுக்காக கதறி அழும் மனைவி என்று குறிப்பிட்டு, இல. கணேசன் உடலுக்கு முன்பு ஒரு வயதான பெண் இருப்பது போன்ற புகைப்படத்தைக் குறிப்பிட்டு கலாட்டா ஊடகம வெளியிட்டுள்ள செய்தி தவறானது. புகைப்படத்தில் இருப்பவர் இறந்த இல. கணேசனின் அண்ணி.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க