YouTurn

தவெக ஆட்சியில் தான் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவதாக பரப்பப்படும் பொய்!

தவெக ஆட்சியில் தான் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவதாக பரப்பப்படும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் (AICSCC), 'நான் முதல்வன்' திட்டம், டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலம் இதற்கு முன்பே தமிழ்நாடு அரசு பல்வேறு இலவச பயிற்சிகளை வழங்கி உள்ளது.

பரவிய செய்தி

Next banger

@TVKVijayHQ na - Ella ball um sixer ah parakuthe. 

Super na. Huge Respect 

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம். காளாஞ்சிபட்டி கிராமத்தில் இயங்கிவரும், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் 200 ஆர்வலர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படுகிறது என்று மே 12 அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

இந்நிலையில் இந்த திட்டம் தவெக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது என்று அக்கட்சியினர் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.


உண்மை என்ன? 

தமிழ்நாடு அரசு, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பல்வேறு இலவச பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி வழங்குவது என்பது வழக்கமான நடைமுறை தான். கடந்த ஆட்சியில் கூட டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 3, 4 ஆகிய தேர்வுகளுக்கு  கட்டணமின்றி  இலவசப்  பயிற்சி வகுப்புகளை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடைபெற்றது குறித்து வெளியான செய்திகள் மூலம் அறிய முடிந்தது. 

image.png


அதே போல் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் (AICSCC)போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம்(CECC), 'நான் முதல்வன்' திட்டம் மூலம் இதற்கு முன்பே தமிழ்நாடு அரசு பல்வேறு இலவச பயிற்சிகளை வழங்கி உள்ளது என்பதையும் பார்க்கமுடிந்தது. 

image.png


முடிவு: 

எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பல்வேறு இலவச பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி வழங்குவது அனைத்து அரசும் செய்யும் வழக்கமான ஒன்று தான். இந்நிலையில் தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தான் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவது போன்று தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க