YouTurn

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் புகுந்த மழை நீர் என்று பரவும் பழைய புகைப்படம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் புகுந்த மழை நீர் என்று பரவும் பழைய புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2020 நவம்பரில் ‛நிவர்' புயல் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, “முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் வீட்டின் வெளியே தண்ணீர் தேங்க கூடிய அளவில் வடிகால் அமைப்பு செய்து இருக்கிறார்கள்” என்று கூறி தற்போது பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திராவிடம் சாதித்தது…

மேலும் இந்த வீடு ஒரு பிராமணருடையது என்பது கித்னா பெயருக்கு தெரியும்

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் வீட்டின் வெளியே தண்ணீர் தேங்கக் கூடிய அளவில் வடிகால் அமைப்பு செய்து இருக்கிறார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது தினமலர் ஊடகத்தில், ”கருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது” என்ற தலைப்பில் நவம்பர் 24, 2020 அன்று, பரவி வரும் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ‛நிவர்' புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் மழைநீர் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மிதந்தன. மேலும் மழைநீர் உள்ளே புகாதவாறு அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றி வந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, அதே புகைப்படத்துடன் நவம்பர் 24, 2020 அன்று, ”முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மீண்டும் புகுந்த மழை நீர்!” என்ற தலைப்பில் சமயம் தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் முதல்வர் கருணாநிதி வீட்டிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது என்றும், அவரது இல்லத்தில் மழை நீர் புகுவது இது முதன்முறை அல்ல இதற்கு முன்பும் பல சமயங்களில் மழை பெய்யும் போது அவரது வீட்டில் வெள்ள நீர் புகுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


இதே போல் இந்து தமிழ், One India Tamil போன்ற ஊடகங்களிலும் 2020ஆம் ஆண்டு பரவி வரும் புகைப்படத்துடன், இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

எனவே, கடந்த 2020 நவம்பரில் ‛நிவர்' புயல் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, “முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் வீட்டின் வெளியே தண்ணீர் தேங்க கூடிய அளவில் வடிகால் அமைப்பு செய்து இருக்கிறார்கள்” என்று கூறி தற்போது பரப்பி வருகின்றனர். 2020ல் அதிமுக ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க