யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெளிநாட்டில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் ஒரு புலியும், ஒரு மானும் நடிக்கும் காட்சி எனக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவு செய்துள்ள வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
வெளிநாட்டில் நடைபெறும் ஒரு சினிமா படம்பிடிக்கும் இடத்தில் ஒரு புலியையும் , மானயையும் வைத்து நடந்த படம் பிடிப்பில்
ஒரு காட்சி !!!!

விரிவான விளக்கம்
வெளிநாட்டில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் ஒரு புலியும், ஒரு மானும் நடிக்கும் காட்சி எனக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை குறித்து செய்தி ஏதேனும் வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது இது குறித்தான எந்த செய்தியையும் பார்க்கவில்லை. மேலும் இந்த வீடியோ குறித்து சமூக ஊடகங்களில் தேடியபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாறாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் 14 அன்று வெளியான மற்றொரு பதிவை பார்க்கமுடிந்தது. அதில் பரவி வரும் வீடியோவை குறிப்பிட்டு, இது A I மூலம் எடுக்கப்பட்டது உண்மையல்லை என்றும், இப்படிதான் தி மு க அரசு கடந்த 4 வருடம் 7 மாதங்களாக போட்டோ சூட்டிங் நடத்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நண்பர்களே இது A I மூலம் எடுக்கப்பட்டது உண்மையல்லை இப்படிதான் தி மு க அரசு கடந்த 4 வருடம் 7 மாதங்களாக போட்டோ சூட்டிங் நடத்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது !!!!
இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation, Decopy ai போன்ற செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.


முடிவு:
எனவே, வெளிநாட்டில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் ஒரு புலியும் , ஒரு மானும் நடிக்கும் காட்சி எனக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவு செய்துள்ள வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.