YouTurn

தமிழ்நாட்டில் கோழிகள் கூட மது அருந்துவதாக தவறாகப் பரவும் கொலம்பியா வீடியோ

தமிழ்நாட்டில் கோழிகள் கூட மது அருந்துவதாக தவறாகப் பரவும் கொலம்பியா வீடியோ

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி மனுசன கடிச்சு கடைசில கோழியையும் குடிக்க வச்சுட்டாங்க...??? இவர்கள் சாராய சாம்ராஜ்ய ராஜ்ஜியம், இதுதான் திராவிட மாடல். இந்த காணொளியை பார்த்துவிட்டு அனைத்து சோசியல் மீடியா குரூப்களுக்கும் பகிருங்கள்...!!



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களை விமர்சித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கோழிகள் கூட மது அருந்துவதைப் பாருங்கள் என்று கூறி கோழிகள் மது அருந்துவதைக் காட்டும் வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதைக் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

Buen día chinú என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதன் முழு வீடியோ "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" என்று ஸ்பானிஷ் மொழியில் குறிப்பிட்டு கடந்த 2022 ஜனவரி 28 அன்றே பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அப்பதிவில் "இந்த இரண்டு கோழிகளும் கொலம்பியாவில் பீர் அருந்துகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் வெளிநாட்டு நபர் ஒருவர் கோழிகளின் அருகில் அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.



எனவே பரவி வரும் வீடியோ கடந்த 2022 இல் இருந்தே வெளிநாட்டு சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் இது எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகையைப் பெற்ற பெண்கள் மது அருந்துவதாகப் பொய் பரப்பும் உமா கார்கி !

மேலும் படிக்க: 890 அரசு பள்ளிகள் மூடல், 815 மதுக்கடைகள் திறப்பு என 2018ன் செய்தியைப் பரப்பும் பாமகவினர் !

இதற்கு முன்பும் தமிழ்நாட்டில் மது விற்பனை குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் குழந்தைகள் மது அருந்துவதாகப் பரவும் 2018ல் இருந்து பரவிய வடஇந்திய வீடியோ!

முடிவு:

நம் தேடலில், தமிழ்நாட்டில் கோழிகள் மது அருந்துவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க