YouTurn

அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணம் என்று பரவும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணம் என்று பரவும் புகைப்படங்கள்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கஜகஸ்தான் விமான விபத்து மற்றும் ஏஐ புகைப்படங்களை ஒன்று சேர்த்து அகமதாபாத் விமான விபத்திற்கு முன்பு கடைசி நிமிட காட்சிகள் என்று தவறாக பரப்பு வருகின்றனர்.

பரவிய செய்தி

அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம்... 

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் விமானத்திற்குள்ளே குழந்தைகள் ஒரே சீட்டில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன?

ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் மதியம் 1:38 மணிக்கு ரன்வேயில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில விநாடிகளிலேயே விமானம் விபத்துக்குள்ளானது.  இதற்குள் குழந்தைகள் சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு, விமானத்திற்குள் எழுந்து நின்றிருக்கமுடியாது. இது குறித்து தேடிய போது, இந்த வீடியோவை சிலர் பதிவிட்டிருந்தனர். அவற்றை உற்றுக் கவனித்த போது வீடியோவில் குழந்தைகளுக்கு பின்புறத்தில் ஒரு ஜோடி கட்டி அணைப்பது போன்று காட்சி வருகிறது. பெண்ணை பிடித்து இழுத்துக் கட்டியணைக்கும் போது அந்த பெண்ணின் தலை திடீரென்று மறைந்து, ஆணின் தலை மட்டுமே தெரிகிறது. 


இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தின் wasitai. Com என்ற இணையதளப்பக்கத்தில் இது குறித்து தேடி பார்த்தோம். அப்போது அதில் “We are quite confident that this image, or significant part of it, was created by Al” என்று பதில் கிடைத்தது. எனவே இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதிச் செய்ய முடிந்தது. 

அடுத்ததாக பரவி வரும் பதிவில், நபர் ஒருவர் திரும்பி பார்க்கும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது இந்த புகைப்படத்தோடு டிசம்பர் 25, 2024 அன்று dailymail ஊடகத்தின் செய்தி ஒன்று கிடைத்தது. அதில் “கஜகஸ்தான் நாட்டில் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளான நிகழ்வில், விபத்து ஏற்படுவதற்கு முன்பு பயணிகள் பிரார்த்தனை செய்த காட்சி வைரலாகி பரவி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் Clashreport என்ற எக்ஸ் பக்கத்தில், டிசம்பர் 25, 2024 அன்று “கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறுதி தருணங்களை அதில் இருந்த ஒரு பயணி படம் பிடித்தார்” என்று அந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு : 

நம் தேடலில், கஜகஸ்தான் விமான விபத்து மற்றும் ஏஐ புகைப்படங்களை ஒன்று சேர்த்து அகமதாபாத் விமான விபத்திற்கு முன்பு கடைசி நிமிட காட்சிகள் என்று தவறாக பரப்பு வருவது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க